தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சார இயக்கத்தை ஜுலை முதல் நாளன்று தொடங்கி வைத்தார். திமுகவின் கொள்கைகளோடு ஒத்த சிந்தனையிலுள்ள மக்களை கட்சியில் இணைப்பது தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம்.
இதற்காக 6 கேள்விகள் கொண்ட ஒரு படிவத்தை வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து அவர்களிடம் வழங்கி ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து திமுகவின் தலைவர்கள்,மாவட்ட செயலாளர்கள், கழக பொறுப்பாளர்கள் எடுத்துரைத்து வருகின்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்பதன் வாயிலாக திமுகவில் இணைய அலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. 94890 94890- என்கிற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் வழங்கினால், பயனர்கள் ஓடிபி (OTP-one time password) அடங்கிய குறுஞ்செய்தியினை பெறுவார்கள்.
பொதுநல வழக்கு: ஓடிபி பெற இடைக்காலத் தடை
இந்நிலையில், திமுகவினர் மேற்கொண்டு வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரத்தில் ஆதார் எண் பெற்று, ஓடிபி பெறப்படுகிறது. இது தனிநபர் உரிமை மீறல் என திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, திமுகவினர் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நடத்தலாம். ஆனால், பொதுமக்களிடம் ஓடிபி கேட்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். டிஜிட்டல் முறையில் பெறப்படும் தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தையும் வழக்கில் சேர்த்து, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஓடிபி பெற இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட நிலையில், மத்திய மாநில அரசுகள் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறும் குறிப்பிட்டு வழக்கினை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
நீதிமன்றத்தின் ஓடிபி பெறக்கூடாது என்கிற இடைக்கால உத்தரவு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், உத்தரவு தொடர்பாக மேல்முறையீடு செய்ய திமுக தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.