தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் உற்பத்தியான VinFast VF6, VF7 மாடல்கள்.. இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்!

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் தனது முதல் 2 மாடல் மின்சாரக் கார்களுக்கான VinFast நிறுவனம் முன்பதிவைத் தொடங்கியது. VinFastAuto.in என்ற இணையதளத்தில் VF6 மற்றும் VF7 மாடல் கார்களை ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உற்பத்தியான VinFast VF6, VF7 மாடல்கள்.. இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்!
தமிழ்நாட்டில் உற்பத்தியான VinFast VF6, VF7 மாடல்கள்.. இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்!




வியட்நாமை சேர்ந்த உலகளாவிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் VinFast, இந்தியாவில் அதாவது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தில், முதலாவது மின்சார கார் மாடல்களுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. இந்திய சந்தையில் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன், நிறுவனம் VF6 மற்றும் VF7 என்ற இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு மாடல்களும் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி வகையை சேர்ந்தவையாகும். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் ஸ்தலமாக கொண்டு, VinFast இந்தியாவில் தன் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்திய வாடிக்கையாளர்களிடையே கவனம் ஈர்க்கும் விதமாக, நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் VinFastAuto.in-ல் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.

முன்பதிவுக்கு ₹21,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரைவில் புதிய மாடல்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் முன்னுரிமையை பெறலாம். முக்கியமாக, இந்த முன்பதிவுக்கான தொகை முழுமையாக திருப்பித் தரக்கூடியதாகும் என்று VinFast தெரிவிக்கிறது.

VF6 மற்றும் VF7 முக்கிய அம்சங்கள்:

VF6 : சிட்டி மற்றும் டெய்லி பயணத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட, காம்பாக்ட் எஸ்யூவி

VF7: மேலும் சிறந்த கம்பியூட்டிங் மற்றும் ரேஞ்ச் கொண்ட மெட்டிக்யூரான எஸ்யூவி மாடல்

இரண்டும் உலக தரநிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகிறது. வசதியான விலை நிர்ணயத்துடன், சுய சார்ஜிங் வசதிகளும் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VinFast நிறுவனத்தின் இந்திய சந்தையை மையமாகக் கொண்டு தனது ஆசிய விரிவாக்கத் திட்டத்தினை முன்னெடுத்து வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகன தேவையை கருத்தில் கொண்டு, VinFast தனது தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் VinFast-ஐ எதிர்கொள்ளும் முந்தைய போட்டியாளர்களாக Tata, Mahindra, Hyundai போன்ற நிறுவனங்கள் இருந்தாலும், VinFast தனது கவர்ச்சிகரமான விலை, ஸ்டைலிஷ் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நவீனத்துவத்தின் மூலமாக தனித்துவத்தை நிலைநிறுத்த முயல்கிறது.