பெண்களே உஷார்... ஒரு லிங்க் தொட்டால் மானம் போகும். டிஜிட்டல் உலகின் ஆபத்தை சொல்லும் அமிகோ

அமிகோ படம் பார்த்தால் டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக, பெண்களுக்கு பிரைவசி விஷயத்தில் எச்சரிக்கை உணர்வு வரும். கதைப்படி அமிகோ என்பது ஒரு ஆப். அதில் தனிப்பட்ட முறையில் பேசும் 10பேருக்கு என்ன நடக்கிறது. இடையில் யார் வந்து மிரட்டுகிறார்கள் என்பதை சொல்கிறோம்

Aug 12, 2024 - 18:48
Aug 13, 2024 - 09:35
 0
பெண்களே உஷார்...  ஒரு லிங்க் தொட்டால் மானம் போகும்.            டிஜிட்டல் உலகின் ஆபத்தை சொல்லும் அமிகோ
அமிகோ பட ஸ்டில்

பிரவீன் இயக்கத்தில் சாந்தினி தமிழரசன், அர்ஜூன் சோமயா உட்பட பலர் நடித்த படம் அமிகோ. இதென்ன தலைப்பு?  இதற்கு என்ன அர்த்தம் என்று இயக்குனரிடம் கேட்டால், ‘ஸ்பானிஷ் மொழியில் அமிகோ என்றால் ‘நண்பன்’ என்று அர்த்தம். இன்றைய டிஜிட்டல் உலகில், இன்டர்நெட் பயன்படுத்தாமல், செல்போன், கம்யூட்டர், லேப்டாப் உபயோகிக்காமல் இருக்கவே முடியாத நிலை. இப்படிப்பட்ட சூழலில் நம் பிரைவஸி என்பது  ரொம்ப கேள்விக்குறியாகிவிட்டது. குறிப்பாக, பெண்களின் பிரைவஸிக்கு  அவ்வளவு ஆபத்து. அதை பேண்டசி கலந்து சைபர் ஹாரர் திரில்லர் பாணியில் இதில் சொல்லியிருக்கிறோம்’’  என்கிறார் இயக்குனர்

என்னது, பேண்டசி கலந்த சைபர் ஹாரர் திரில்லர் பாணியா? புதுசா இருக்குதே என்று கேட்டால், ‘‘இன்னும் எளிமையாக கதை சொல்கிறேன். அமிகோ என்பது ஒரு ஆப். ஒரு குறிப்பிட்ட டீம் அல்லது நண்பர் குழு மூலம் மட்டும் பயன்படுத்தும் தனிப்பட்ட ஆப். அதை பத்துபேர் பயன்படுத்துகிறார்கள். நிறைய விஷயங்கள் பேசுகிறார்கள். அப்போது முகம் தெரியாத ஒரு நபர் அந்த ஆப்பில் வந்து பேசுகிறார். பல விஷயங்களை செய்கிறார். பல ரகசியங்களை வெளிப்படுத்த, மற்றவர்கள் மிரள்கிறார்கள். அவர் யார்? ஆணா? பெ ண்ணா? ஏலியனா? ஏ.ஐ பயன்பாடா? அவர் நோக்கம் என்ன? அந்த 10 நண்பர்களுக்கு என்ன நடந்தது என்பதை திரில்லர் கலந்து சொல்லியிருக்கிறோம். இப்படிப்பட்ட டெக்னிக்கல் திரில்லர் கதையில் ஹாரருக்கு இடமில்லை. அதுவும் இந்த கதையில் இருக்கிறது’’  என்கிறார் பிரவீன்

சாந்தினிக்கு என்ன வேடம் என்றால், ‘‘ அவர் மாடலாக வருகிறார். அந்த கேரக்டருக்கு ஏற்ப, அவர் கிளாமராக நடித்து இருக்கிறார். ஜீவா, பிரவீன் இளங்கோ, சுவீதா ராஜேந்திரன், வட்சன், விக்கி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிகிலாமா என்ற பாடலை கொச்சியில் கலர்புல்லாக எடுத்துள்ளோம். ரஞ்சிதமே புகழ் மானசி பாடியிருக்கிறார்.வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செ ய்ய, ரேவா இசையமைத்துள்ளார்

 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. டெக்னிக்கலாக இந்த படம் பல புது தகவல்களை பேசும் , விவாதிக்கும். நான் அண்ணா பல்கலைக்கழத்தில் எம்.எஸ்சி படித்துவிட்டு, விஸ்காம் முடித்தேன். பல குறும்படங்கள், விளம்பர படங்கள் பண்ணிவி்ட்டு முதலில் இந்த படத்தை இயக்குகிறேன்’ என்கிறார்

உண்மையில் இன்றைய இன்டர்நெ ட் யுகம் அவ்வளவு ஆபத்தானதா? நம்ம தகவல்கள், போட்டோ, வீடியோக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், ‘‘இரும்புத்திரை படத்தில் ஒரு லிங்க் தொட்டால் பணம் போகும் என்று பார்த்து இருப்போம்.   இப்போது அதை விட அட்வான்ஸ் ஆன மிரட்டல்கள், ஆபத்து வந்துவி்ட்டது, சில லிங்க் தொட்டால் நாம் மானமே போய்விடும். நம் அந்தரங்க போட்டோ, வீடியோ, ரகசிய தகவல்களை பலரால்  திருட முடியும். உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். கடன் வாங்கிய ஒருவரை, கடன் கொடுத்தவர் பல நாட்கள் தேடினார். அவரை எந்தவகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. போனை எடுக்கவில்லை.அவருக்கு ஒரு வீடியோ லிங்க் அனுப்பினர். அதை தொட்டவுடன் அவரின் லொகசேன் தெரிந்துவிட்டது. இப்பவெல்லாம்  எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்கும் ரகசியங்களையும் இ்ப்போது மற்றவர்களால் திருட முடியும். 

இந்தியாவில் பல பார்ன் வெப் சைடுகளுக்கு தடை. ஆனாலும், இங்கே  பலர் பார்க்கிறார்கள். இந்தியாவில் அதிகம்பேர்  பார்ப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட வெப்சைடில் பெ ண்களின் அந்தரங்க போட்டோ வந்தால் அதை நீக்குவது, அது பரவாமல் தடுப்பது கிட்டத்தட்ட கஷ்டம். கன்டன்ட் காரணமாக இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் கதை, பிளாஷ் பேக் , சொல்ல விஷயத்தை சமரசம் இ்ல்லாமல் கூறியுள்ளோம்.

அமிகோ படம் பார்த்தால் ஆண்கள், பெ ண்கள் என  ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட  விழிப்புணர்வு ஏற்படும். டிஜிட்டல் யுகத்தில்  பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உணர்ச்சிவசப்பட்டு, ஆர்வக்கோளாறி்ல் எதையும் செ ய்யக்கூடாது. குறிப்பாக, பிரைவசி விஷயத்தில உஷாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு வரும்.ஆகஸ்ட் 23ம் தேதி ரிலீஸ்’’ ன்கிறார் இயக்குனர் பிரவீன்.

**

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow