Sitharam Yechury : காம்ரேட் சீதாராம் யெச்சூரி..மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தும் அரசியல் தலைவர்கள்

Political Leaders Condolences To Comrade Sitharam Yechury Death : சீதாராம் யெச்சூரியின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பேரிழப்பு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Sep 12, 2024 - 17:10
Sep 12, 2024 - 17:13
 0
Sitharam Yechury : காம்ரேட் சீதாராம் யெச்சூரி..மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தும் அரசியல் தலைவர்கள்
Political Leaders Condolences To Comrade Sitharam Yechury Death

Political Leaders Condolences To Comrade Sitharam Yechury Death : இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் யெச்சூரி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். யெச்சூரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் காலமானார். செயற்கை சுவாச உதவியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த சீதாராம் யெச்சூரி, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,  கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  


 
1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. அவருக்கு வயது 72. ஆந்திராவைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பள்ளி, கல்லூரி பருவகாலத்தில் பணியாற்றியவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக மூன்று முறை இருந்தார் இவர். ஜே.என்.யூ.வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற சீதாராம் யெச்சூரி, அவசர் நிலை பிரகடனத்தின்போது கைதானார். 1974ஆம் ஆண்டு மாணவர் கூட்டமைப்பில் இணைந்த யெச்சூரி 1975ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

1974 ஆம் ஆண்டில் மாணவர் கூட்டமைப்பில் இணைந்த யெச்சூரி 1975ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். மார்க்சிஸ்ட் கட்சியில் மத்தியக் குழு உறுப்பினர், பொலிட் ப்யூரோ என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2015ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார்.

மாநிலங்களவை உறுப்பினராகவும், கட்சியின் தலைவராகவும் இருந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மறையும் வரை தொடர்ந்து 3முறை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தார் யெச்சூரி.அவரது மறைவு செய்தி அரசியல் கட்சித்தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதல் உள்ள மிகச்சிறந்த பாதுகாவலர் சீதாராம் யெச்சூரி என அவரது மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் யெச்சூரி. யெச்சூரியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சீதாராம் யெச்சூரியின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பேரிழப்பு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.சீதாராம் யெச்சூரி மறைவு தேசிய அரசியலுக்கு பெரும் இழப்பு என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சீதாராம் யெச்சூரியின் மறைவு பேரிழப்பு என்று தமாகா கட்சி தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார். மறைந்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் சீதாராம் யெச்சூரியின் உடல் தானம் செய்யப்பட உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow