K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்  பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து  பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு நாங்கள் தான் காரணம் - முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

அதிமுக ஆட்சியில் சீனா  பட்டாசுகள் இறக்குமதியாவது தடுத்து நிறுத்தப்பட்டதால் தான், இன்றைய தினம் பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..! 

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டப் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.

வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

உடன்பிறப்புகள் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இடைத்தேர்தலில் நிற்கிறேன் - சீமான் பேச்சு

எங்கள் உடன்பிறப்புகள் எங்களை கைவிட்டு விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்த இடைத்தேர்தலில் நிற்பதாகவும், கோட்டையை திறக்க ஒரே சாவி ஈரோடு கிழக்கிலிருந்து உதிக்கட்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் சிறுவன் 14 நாட்களுக்குப்பிறகு மீட்பு..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் மாநிகத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் 14 நாட்கள் கழித்து ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

விமானத்தில் நடுவானில் 2 பயணிகளுக்குள் சண்டை.. தொடர் விசாரணைக்கு ஜாமினில் விடுவிப்பு..!

கொச்சியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் விமானம், நடு வானில் பறந்தபோது, விமானத்திற்கு வெளிநாட்டு பயணி உட்பட 2 பேர் சண்டை போட்டுக் கொண்ட சம்பவத்தில், தொடர் விசாரணைக்கு பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

ஜிஎஸ்டி வரியை வரன்முறைப்படுத்த வேண்டும் - வணிகர் சங்க மாநில தலைவர் கொளத்தூர் ரவி வேண்டுகோள்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏராளமான முரண்கள் உள்ள நிலையில், வணிகர்களும், மக்களும் கடுமையாக பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வரன்முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் ரவி தெரிவித்துள்ளார். 

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு..!

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அந்தத் திட்டத்தை ரத்து செய்தது பாஜக தான் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்கள் விரோத அரசு.. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அட்ரஸ் இல்லாத கட்சி தான் திமுக- தமிழிசை ஆதங்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

76-வது குடியரசு தின விழா: உயர்நீதி மன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த நீதிபதி

நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

'விடாமுயற்சி’ உடன் பல நிலைகளை வென்றவர்.. அஜித்திற்கு ஜெயக்குமார் வாழ்த்து

'பத்ம பூஷன்'  விருது பெற உள்ள நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

76-வது குடியரசு தினம்.. தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் மரியாதை

சென்னையில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

போலி மதுபான ஆலை நடத்தி வந்தவர் கைது.. தலைமறைவான நபருக்கு காவல்துறை வலை வீச்சு

போலி மதுபான ஆலை நடத்தி வந்த கோபி என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மாணவனின் உயிரை பறித்த ப்ளூடூத் ஹெட்செட்.. நடந்தது என்ன?

ரயில் தண்டவாளத்தில் விழுந்த ப்ளூடூத் ஹெட்செட் எடுக்க சென்ற ராஜகோபால் என்ற மாணவன் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீடு ரத்து.. தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவு

சாகித்ய அகாடமி விருது பெற்று தமிழுக்கு தொண்டாற்றியதற்காக, கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக் கூடாது என வீட்டு வசதி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மொழிப்போர் தியாகிகள் தினம்: தாளமுத்து, நடராசன் நினைவிடம் திறப்பு

மொழிப்போரில் உயிர்நீத்த தாளமுத்து, நடராசன் இருவரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரனின் இரண்டாவது மகனை தேடும் போலீஸார்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நாகேந்திரனின் இரண்டாவது மகன் அஜித் ராஜை போலீஸார் தேடி வருகின்றனர். 

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாபட்டி பயணம்

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்லவுள்ளார். 

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

அடையார் காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குட்கா முறைகேடு வழக்கு.. கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்.. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்..!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தேநீர் விருந்து.. த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!

குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக விளையாட்டு அரசியல் செய்துள்ளது - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் விளையாட்டு அரசியல் செய்துள்ளது என்றும், கடந்த காலங்களில் டங்ஸ்டன் சுரங்கம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு மக்கள் போராட்டம் நடத்திய பிறகு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு நாடகம் ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

முடிவுக்கு வரும் வேங்கை வயல் விவகாரம்..? 750 நாட்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக  தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.