தமிழ்நாடு

”நானே வேதனைல இருக்கேன்” மனைவிக்கு கத்திக் குத்து கேஷுவலாக எஸ்கேப்பான கணவன்!

மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, அந்த சலனமே இல்லாமல், கையில் கட்டைப் பையுடன் செம கூலாக எஸ்கேப்பான கணவனை, போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

”நானே வேதனைல இருக்கேன்”  மனைவிக்கு கத்திக் குத்து  கேஷுவலாக எஸ்கேப்பான கணவன்!
”நானே வேதனைல இருக்கேன்” மனைவிக்கு கத்திக் குத்து கேஷுவலாக எஸ்கேப்பான கணவன்!

சிவகாசி முருகன் காலனி பகுதியில் வசித்து வருபவர் திருமலை குமார். 30 வயதான இவர் ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திருமலை குமார் கோவையில் உள்ள அச்சகம் ஒன்றில் வேலை பார்த்ததாகவும், இதனால் அவர் அவ்வப்போது தான் சிவகாசிக்கு சென்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், திருமலை குமாருக்கு அவரது மனைவி ராஜலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ராஜலட்சுமிக்கு வேறொரு நபருடன் தகாத உறவு இருந்ததாகவும், இது திருமலை குமாருக்கு தெரிந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் கோவையிலிருந்து சிவகாசிக்கு சென்ற திருமலைகுமார், மனைவி ராஜலட்சுமியை கண்டித்துள்ளார். மேலும், தகாத உறவை கைவிட வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட, அப்போது ஆத்திரமான திருமலை குமார், ராஜலட்சுமியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.  

இந்நிலையில், மனைவியை கத்தியால் குத்தியதும் பதற்றமான திருமலைக்குமார், ஒரு கட்டைப் பையை கையில் எடுத்துக்கொண்டு, அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது அங்கிருந்த் சிலர், அவரிடம் என்ன சத்தம் என்று கேட்டதற்கு, “ஒன்றுமில்லை” என மழுப்பலாக கூறியுள்ளார். திரும்பவும் வீட்டில் ஏதோ சத்தம் கேட்டதே என கேட்டதற்கு, “அட நானே வேதனைல இருக்கேன்... நீ வேற.” என்பதாக கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

இந்த சம்பவத்தை வீட்டின் உரிமையாளர் வீடியோவாக எடுத்திருந்த நிலையில், அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற திருமலை குமாரை, அங்கிருந்த காவலர்கள் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். தகாத உறவு காரணமாக, மனைவியை கொலை செய்த கணவன், பின்னர் செம கேஷுவலாக எஸ்கேப் ஆக முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.