தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் கைது..!

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் கைது..!
ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் கைது..!

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் 2 வாலிபர்கள் கத்தியுடன் ரெயிலில் ஏறாமல் நின்று கொண்டு இருப்பதாகவும் ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 உடனே பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்க நாதன், பரங்கிமலை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ்குமார் வந்து ஆய்வு செய்தனர். 

அப்போது கத்தியுடன் இருந்த ஒரு வாலிபர் தப்பி ஒடிவிட்டார். எதுவும் தெரியாமல் அமர்ந்திருந்த வாலிபரை பழவந்தாங்கல் போலீசார் பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் நாவலூரில் வசித்து வரும் பார்த்திபன் (19) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை தமிழ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பெண் காவலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்த பார்த்திபனை பிடித்த சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் வந்தனர். அப்போது ரெயிலில் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

கத்தியுடன் தப்பி ஒடியவன் பெயர் விஸ்வா என தெரியவந்தது. கத்தியுடன் வந்தது எதற்கு? கல்லூரி மாணவர்களுக்கு இடையே தகராறில் யாரைவது வெட்ட திட்டமிட்டு இருந்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அநேக இடங்களிலும் தொடர்ந்து, கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில் தமிழக அரசும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.