K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

போலீசை அநாகரிகமாக திட்டிய இருவர் தம்பதியே இல்லையா? இருவரை தட்டித் தூக்கிய போலீஸ்.. வெளியான பகீர் தகவல்கள்!

சென்னையில் போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரும் பிடிபட்டனர். வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... புதிய எச்சரிக்கை!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Irfan: குழந்தை பிறந்த வீடியோ... அடுத்த சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்... மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தைப் பிறப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்ப மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

'பங்கு சந்தையில் 500 மடங்கு லாபம்'.. ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Diwali Special Bus: தீபாவளி சிறப்புப் பேருந்துகள்... பெட்டி, படுக்கையோட ரெடியாகிடுங்க மக்களே..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28 முதல் 30 வரை சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

துணி துவைக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்.. காப்பாற்ற போன பெண்ணும் பலி

மேட்டூர் அருகே துணி துவைக்கச் சென்றபோது, இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதை அடுத்து, காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதியை கூப்பிடவா?.. போலீசாரை அநாகரீமாக திட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்த தம்பதி [வீடியோ]

சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும் படி கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக வழக்கறிஞர் போதையில் ரகளை.. பேரிகார்டை அகற்றியதால் பரபரப்பு

திமுக வழக்கறிஞர் போதையில் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட துணிகடை வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் வண்ணாரப்பேட்டை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டியலின ஊராட்சித் தலைவர்களை சந்திக்காத இயக்குநர்.. அநீதி, அவமதிப்பு.. அன்புமணி காட்டம்

பட்டியலின ஊராட்சித் தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சந்திக்க மறுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

தாறுமாறாக ஓடிய சொகுசு கார்... ஏழு பேருக்கு எலும்பு முறிவு.... அடித்து துவைத்த பொதுமக்கள்!

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை.. நாளை மறுநாள் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் ஒரு நாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு ஏன் ஏற்படுகிறது?.. குணப்படுத்த இயலுமா? - மருத்துவர் சொல்வது என்ன?

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் அதனை முழுவதுமாக குணப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷா ரெட்டி தெரிவித்துள்ளார்.

வெளுக்கப்போகும் கனமழை.... லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா?

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 19) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Diwali Leave: தீபாவளி கொண்டாட ரெடியா மக்களே... அரசு அறிவித்த போனஸ் லீவு... டக்குன்னு Plan-அ மாத்துங்க!

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 01.11.2024 அன்று விடுமுறை வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

“கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக் கூடாது..” கோயில் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் அட்வைஸ்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள், கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆளுநர் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை.. தமிழ்ச் சமூகம் கொதித்தளிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தமிழ் என பேசுகிறார்கள்.. ஆனால் ஒன்றும் செய்யவில்லை -  ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்

தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் தமிழ், தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

'ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றினேன்’.. பொன்னை பாலு வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியான நிலையில், ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றியதாக பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் மீது தாக்குதல்... வேட்டையன் பட பாணியில் அத்துமீறல்... பகீர் வீடியோ

நெல்லையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில், மாணவர்கள் மீது ஆசிரியர் கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

த.வெ.க மாநாடு மழையால் தடையா?.. 22ஆம் தேதி மீண்டும் மழைக்கு வாய்ப்பு

வரும் 22ஆம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1,20,000 வாடகையில் பங்களா.. 16 லட்சம் வீண் செலவு.. துணைவேந்தர் மீது சரமாரி புகார்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் அரசு பணத்தை வீண் விரயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கைதிகளுக்கு போதைப்பொருள், செல்போன் சப்ளை... வக்கீல்களுக்கு டிஜிபி கட்டுப்பாடு

சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு டிஜிபி அலுவலகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.... எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 18) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதார் கார்டு புதுப்பிப்பு.. கால அவகாசம் நீட்டிப்பு!

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

செட் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு!

செட் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தப் பின்னர் 4000 உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேரடி தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.