தமிழகத்திற்கு மத்திய அரசு 2000 கோடி ஒதுக்காத நிலையில் மாநில அரசே அதற்கான பணிகளை மேற்கொள்ளும் என்றும், தமிழக பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு இடம்பெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கைக்காக பாரதிய ஜனதா கட்சி கையெழுத்து இயக்கம் நடத்தினால் அது இரு மொழிக் கொள்கைக்கு சாதகமாக அமையும்,ஆனால் இதற்காக பாரதிய ஜனதா கையெழுத்து இயக்கம் நடத்தியதற்காக வருந்தும் நிலை ஏற்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாணவர்களுக்கான இலவச கலந்தாலோசனை வழங்கும் 14417 மையத்தை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2023- 24 கல்வியாண்டில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மாணவர்களிடமிருந்து 84 அழைப்புகள் பெறப்பட்டுள்ளதாக அதில் 8 அழைப்புகள் மட்டுமே பள்ளி வளாகத்தில் இருந்தும் மற்ற அழைப்புகள் பள்ளிக்கு வெளியே இருந்தும் பெறப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து மாணவர்கள் பாலியல் ரீதியாக சந்திக்கும் துன்புறுத்தல்களை துணிந்து இந்த எண்ணிற்கு அழைத்து பதிவு செய்யலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார் இந்த குற்றச்சாட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வெறும் தண்டனை மட்டும் வழங்காமல் அவர்களின் சான்றிதழ்களையும் ரத்து செய்யும் முடிவையும் எடுத்துள்ளதாக தெரிவித்தார்
வரும் ஜூன் மாதம் பள்ளி திறந்த பின்பு மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக தெரிவித்த அவர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கும் பாலியல் ரீதியான தவறுகளில் ஈடுபடா வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்
பள்ளி வளாகங்களில் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதால் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் உத்தர பிரதேச மாநிலத்திலும் 2000 க்கும் அதிகமான பாலியல் புகார்கள் பெறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்தாலும் அங்கேயும் பெண்களுக்கு எதிரான புகார்கள் நடைபெறக்கூடாது என தெரிவித்தார்.
மும்மொழி கொள்கைக்காக பாரதிய ஜனதா கட்சி கையெழுத்து இயக்கம் நடத்தினால் அது இரு மொழி கொள்கைக்கு சாதகமாக அமையும் என்றும் கையெழுத்து இயக்கம் நடத்தினால் ஏன் நடத்தினோம் என பாஜக வருந்தும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
அதேபோன்று தனியார் பள்ளிகளை மூட வேண்டும் அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை இடம்பெற வேண்டும் என்று சொல்வதெல்லாம் ஜனநாயக நாட்டில் ஆரோக்கியமான கருத்தாக இருக்காது
எந்த பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற சுதந்திரம் பெற்றோர்களுக்கு உள்ளது அதில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை எங்கள் மாநிலத்திற் கான கொள்கையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் எனவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்