K U M U D A M   N E W S
Promotional Banner

அரசியல்

ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகள்.. இலக்கின் முதல் படிதான் 2026 தேர்தல்- விஜய்

மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும் என்றும் அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா-நிர்மல் குமாருக்கு தவெகவில் பொறுப்பு.. வெளியான அதிரடி அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோருக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு வழக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தவெகவில் இணையும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் நிர்மல் குமார்?

Nirmal Kumar Join TVK : அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகாத்மா காந்தி நினைவு நாள்: அரசியலாக்குவதைத் தவிருங்கள் ஆளுநரே..!  மு.பெ.சாமிநாதன் அறிக்கை

மகாத்மா காந்தி நினைவு நாளை  அரசியலாக்குவதைத் தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

தை அமாவாசையில் விஜய் எடுத்துள்ள முடிவுகள் தவெகவிற்கு பலன்களை அள்ளித்தருமா? விஜய்யின் அடுத்த ப்ளான் இதுதான்..!

கட்சி தொடங்கியதில் இருந்தே கிரக பலன்களை பார்த்துதான் ஒவ்வொரு மூவ்களையும் தவெக தலைவர் விஜய் எடுத்து வைத்து வருகிறார் என்று கூறப்படும் நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு ஆதவ் அர்ஜூனாவை கட்சிக்குள் இணைக்கும் முடிவை விஜய் எடுத்துள்ளதாகக் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்ற தேர்தல் 2026: தவெகவில் இணைவும் ஆதவ் அர்ஜுனா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளை சுற்றிவளைத்து பாஜகவினர் வாக்குவாதம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக அஸ்வினை தலைமை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து. மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம் ஏற்பட்டது.

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்தும் திமுக.. அண்ணாமலை ஆதங்கம்

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமே அதிமுக தான்- சிவசங்கர் குற்றச்சாட்டு

மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக-வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

திமுக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா..? விஜய் எங்களுக்கு எதிரி இல்லை- ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் - எம்.பி துரை வைகோ

பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவி தான் எனக்கூறிய மதிமுக முதன்மைச்செயலாளரும், எம்பியுமான துரைவைகோ, எனக்கு பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து.. திமுகவை தொடர்ந்து தவெக புறக்கணிப்பு?

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை  திமுக புறக்கணித்த நிலையில் தவெக-வும் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்து.. தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்க உள்ள நிலையில் அதனை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் தவெக.. மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களை விஜய் நேர்காணல் செய்த பின் மாவட்ட செயலாளர்கள் குறித்த பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்டவர்.. அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி- கே.என்.நேரு விமர்சனம்

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீபகாலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார் என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல்.. அமைதியான முறையில் வாக்குசேகரிக்க செல்வப்பெருந்தகை அறிவுரை..!

Erode By Election: ஈரோடு கிழக்குத்தொகுதியில் பணியாற்ற கூடிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனையில் ஈடுபட்டார்.

பரந்தூர் விவகாரம்.. அரசிற்கு லாபம் இருக்கிறது.. நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி- விஜய் ஆதங்கம்

பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தூர் போராட்டம்.. விஜய் வருகையையொட்டி எல்லையில் போலீஸார் குவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க உள்ள நிலையில் கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா..? நாதக வேட்பாளர் ஆதங்கம்

ஒட்டுமொத்த திராவிடத்ததையும் எதிர்த்து போட்டியிடும் ஒரு பெண்மணியை, மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவது தான் நல்லது - செல்வப்பெருந்தகை பேட்டி

விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும்- சசிகலா ஆதங்கம்

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் - ஜெயலலிதா புகழை யாராலும் அசைக்க முடியாது - டி. ஜெயக்குமார்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் புகழை யாராலும் அசைக்க முடியாது என டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.