K U M U D A M   N E W S

சினிமா

சூர்யா மாதிரி தம்பிக்காக எதுவும் செய்வேன்.. விஷ்ணு விஷால்

சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

'துருவ நட்சத்திரம்' படத்தின் அப்டேட் கொடுத்த GVM!

'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீட்டுக்கு பிறகே மற்ற பணிகளை தொடங்குவதாகவும், படம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒரே படம்.. 6 இசையமைப்பாளர்கள்.. கவனம் ஈர்க்கும் அதர்வாவின் DNA

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்கள் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா ஹீரோவாக நடிக்கும் ’டி.என்.ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பாடல்கள், பின்னணி இசையென மொத்தமாக 6 இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.

விஜய் பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

விஜய்யின் ‘கோட்’ பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Vairamuthu: ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.. வைரமுத்து ஆதங்கம்

தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் படத்தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டு தலைப்புகள் வைப்பது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்றும் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிவேகமாக சென்ற கார்.. சினிமா பணியில் துரத்திய போலீசார்

செய்யாறு அருகே தடுப்புகளை மோதிவிட்டு அதிவேகமாக சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

சூர்யாவின் ‘வாடிவாசல்’ கைவிடப்படுகிறதா? – தயாரிப்பாளர் பதில்

வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்

தக் லைஃப் படத்தில் சாதிபெயர் நீக்கம்-விமர்சனம் எழுந்ததால் நடவடிக்கை

தக் லைஃப் முன்னோட்ட வீடியோவில் இடம் பெற்ற சாதிப்பெயரை படக்குழு நீக்கியுள்ளனர்

தக் லைஃப் திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் பொருத்தமானவர் - இயக்குநர் மணிரத்னம்

தக் லைஃப் திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் தான் மிகவும் பொருத்தமான நடிகர் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா..?

நடிகர் சூர்யா 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

'பென்ஸ்' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்? நாளை வெளியாகும் அப்டேட்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

டபுள் ஹீரோ கதையில் இணையும் ரவி மோகன்- எஸ்.ஜே.சூர்யா.. ரசிகர்கள் உற்சாகம்!

கார்த்திக் யோகி இயக்கும் டபுள் ஹீரோ படத்தில் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஓடிடியில் வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி

நடிகர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

மதயானைக் கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

“எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்"- கமல்ஹாசன்

அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ‘குபேரா’ இசை வெளியிட்டு விழா...தேதி அறிவித்த படக்குழு

தனுஷ், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

YOUTUBE CHANNEL தொடங்கிய AK..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?

'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளதாக அஜித்குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தும் இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்...படக்குழு வெளியிட்ட போஸ்டர்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆகாஷ் பாஸ்கரனுக்கு ED சம்மன்... ‘பராசக்தி’ படத்திற்கு சிக்கலா?

இன்று ஆஜராகும்படி ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஆகாஷ் பாஸ்கர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் சாம் C.S மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் பிரபல மியூசிக் டைரக்டர் மற்றும் பாடகரான சாம் C.S என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.

பான் இந்தியா ஸ்டார் ஆனார் ரெஜினா கசாண்ட்ரா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா கசாண்ட்ரா பான் நடிகையாக வலம் வருகிறார்.

எமன் கொடுக்கும் ஆஃபர்.. என்ன செய்தார் நாயகன்? எமன் கட்டளை திரைப்பட விமர்சனம்

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லாம் நார்மல். அதையே எமலோகத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொன்னால், அது புதுமை!

ரஜினி, கமல் இணைந்து நடித்தால் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்...இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்

ரஜினி, கமல் இருவரையும் வயதான கேங்ஸ்டர்ஸ்களாக காட்டும் கதையை வைத்திருந்தேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.. வெளியானது சூப்பர் அப்டேட்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" (Love Insurance Kompany - LIK) திரைப்படம் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி திரையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்…திரையுலகினர் இரங்கல்

இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் என வைரமுத்து பதிவு