இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனமாக ஜி ஸ்குவாட் நிறுவனம் 'ஃபைட் கிளப்' படத்தை தொடர்ந்து, இரண்டாவது படைப்பாக 'பென்ஸ்' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
பாக்யராஜ் கண்ணன் ஏற்கனவே 'ரெமோ', 'சுல்தான்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த 'விக்ரம்', 'கைதி', 'லியோ' ஆகிய படங்களைப் போலவே, 'பென்ஸ்' படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU) கதையமைப்புடன் தொடர்புடையதாக உருவாகி வருகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மே 12-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தில், சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸ் கடைசியாக நடித்த 'ருத்ரன்' திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை. இதனால் 'பென்ஸ்' திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 'பென்ஸ்' படத்தின் புதிய கதாபாத்திரத்தை நாளை (ஜூன் 4) வெளியிட உள்ளதாக படக்குழு இன்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், அந்த கதாபாத்திரம் மலையாள நடிகர் நிவின் பாலி என்றும் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
பெரிய பட்ஜெட்டில் முழு கமர்ஷியல் படமாக உருவாக்கி வரும் 'பென்ஸ்', இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான 'ஃபைட் கிளப்' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், 'பென்ஸ்' படத்தை உருவாக்கத்தில் படக்குழு மிக கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

You are ‘N’ot Ready for this.
— GSquad (@GSquadOffl) June 3, 2025
That’s it. That’s the clue 😉#BenzCastReveal Tomorrow 💥@offl_Lawrence @GSquadOffl @PassionStudios_ @TheRoute @Dir_Lokesh @Jagadishbliss @Sudhans2017 @bakkiyaraj_k @SaiAbhyankkar @gouthamgdop @philoedit @jacki_art @actionanlarasu pic.twitter.com/oX5diEojwe