சினிமா

சென்னையில் ‘குபேரா’ இசை வெளியிட்டு விழா...தேதி அறிவித்த படக்குழு

தனுஷ், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ‘குபேரா’ இசை வெளியிட்டு விழா...தேதி அறிவித்த படக்குழு
குபேரா திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா தேதியை அறிவித்த படக்குழு
நடிகர் தனுஷின் 51வது படத்தை சேகர் கமூலா இயக்கி உள்ளார். இதில் நடிகர் நாகர்ஜூனா பிரதான கதாபாத்திரத்திலும், நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

குபேரா இசை வெளியீட்டு விழா

பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள குபேராவிற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேராவில் தனுஷின் கெட்டப் புதுமையாக இருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரான்ஸ் ஆஃப் குபேரா என பெயரிடப்பட்ட டீசர் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், குபேரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் அரங்கத்தில் நடைபெறும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு

சென்னையில் நடக்க இருக்கும் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பான் இந்திய படமாக குபேரா உருவாகி உள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.