"விக்ரம் வேதா", "கைதி", "பார்க்கிங்" உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் CS மீது ரூபாய் 25 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சாம் CS மீது புகார்
"தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு" என்ற படத்திற்கு இசை அமைப்பதற்காக ரூபாய் 25 லட்சம் பணம் கொடுத்ததாகவும், ஆனால் மியூசிக் டைரக்டர் சாம் CS, மியூசிக் போடாமலும் பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றி வருவதாக திரைப்பட தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு "தமிழ் பையன், ஹிந்தி பொண்ணு" என்ற படம் தயாரிப்பதற்காக மியூசிக் டைரக்டர் ஷாம் CS என்பவரிடம் ரூபாய் 25 லட்சம் பணம் கொடுத்ததாகவும், பின்னர் கொரோனா ஊரடங்கு என்பதாலும், மேலும் தயாரிப்பாளரின் தந்தை கொரோனாவில் உயிரிழந்த காரணத்தினாலும் படப்பிடிப்பு பாதியில் நின்றுள்ளது.
போலீசார் விசாரணை
இதனையடுத்து தற்போது அந்த படப்பிடிப்பு மீண்டும் துவங்கிய நிலையில், மியூசிக் டைரக்டர் ஷாம் CS மியூசிக் போடாமலும், மேலும் தனது பணத்தை திரும்பத் தராமலும் ஏமாற்றி வருவதாக திரைப்பட தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் CMBT காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிஎம்பிடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.