K U M U D A M   N E W S

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விஜய் வந்திருந்தால் கதையே வேற -நடிகர் தாடி பாலாஜி

விஜய் நல்ல சான்ஸை மிஸ் செய்துவிட்டாரெனத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நடிகர் தாடி பாலாஜி பேச்சு

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற உறவினர்கள்..கைது செய்த காவல்துறை

உயிரிழந்த பள்ளி மாணவனின் உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கும், உறவினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை வந்த சரக்கு விமானத்தின் இன்ஜினில் புகை வந்ததால் பரபரப்பு

கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் இன்ஜினில் புகை வந்ததால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

விருதாச்சலத்தில் காத்துக்கிடக்கும் விவசாயிகள்..மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்

சுமார் 5000 நெல் மூட்டைகள் நனைந்தும், மறுமுளைப்புத்தன்மை ஏற்பட்டும், பூசனம் பிடித்தும் நெல் மணிகள் வீணாகி வருவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்த தீயை அழைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு | A major accident was averted as the fire department quickly responded to the fire

உயிர்பிழைத்த 181 பயணிகள்.. சென்னையில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை – திருப்பூரில் ரூ.295 கோடியில் புதிய நலத்திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

வன்னியர் சங்க மகளிர் மாநாடு.. ராமதாஸ் தலைமையில் நிறைவேறிய 14 தீர்மானங்கள்!

தமிழகத்தில் பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைப் போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு நேற்று பூம்புகாரில் நடைபெற்றது.

செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கோவை சி.எஸ்.ஐ சர்ச்சில் பரபரப்பு: வழக்கு தொடர்ந்த உதவி ஆயரை தடுத்த பவுன்சர்கள்!

கோவையில் சிஎஸ்ஐ சர்ச் பிஷப் மோசடி வழக்கில், வழக்கு தொடுத்த உதவி ஆயர் ஆலயத்திற்குள் நுழைய விடாமல் பவுன்சர்கள் தடுத்துள்ளனர் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

அமெரிக்கா-இந்தியா உறவுகள்: பதட்டம் தேவையில்லை - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல் – மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார்!

சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவி மீது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளா நீங்கள்...போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் – கேரள இளைஞர் கைது

சூட்கேசில் கஞ்சாவை மறைத்து கொண்டு கேரள இளைஞர் கைது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

சீனாவில் திடீர் வெள்ளத்தில் 10 பேர் உயிரிழப்பு – 33 பேர் மாயம்

சீனா முழுவதும் இயற்கை பேரழிவுகள் பொதுவானவையாக உள்ளன. குறிப்பாகக் கோடையில், சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும், மற்ற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும்.

காவல் உதவி செயலியை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்: தமிழக காவல்துறை தகவல்!

தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி: ஏற்றுமதித் துறைக்குப் பெரும் பின்னடைவு!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. Walmart, Amazon போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும்- பா.ம.க வழக்கறிஞர் பாலு பேட்டி

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் நாளைச் சட்டப்படி எதிர்கொள்வோம் எனப் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 51 அரசு மருத்துவர்கள் பணிநீக்கம்: அரசின் அதிரடி நடவடிக்கை!

கேரளாவில் முறையாகப் பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் - பிரேமலதா விஜயகாந்த் உறுதி

குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வர் தனிப்பிரிவு மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சினையைத் தீர்க்காமல் மன்னர் - இளவரசர்போல் செயல்படுவதா? - வானதி சீனிவாசன் விமர்சனம்!

அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

பெண்களுக்கு தேவையான கல்வியை கொடுக்க வேண்டும் – நடிகை தேவயானி

வரதட்சணை வாங்குவது குற்றம் என்பதை படத்தில் மூலமாகவே நாங்கள் சொல்லியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை தேவயானி கேட்டுக் கொண்டுள்ளார்.

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்...இருவருக்கு அரிவாள் வெட்டு..வீடியோ வெளியாகி அதிர்ச்சி

இளைஞர்கள் இரண்டு நபர்களை வெட்டிவிட்டு கத்தியுடன் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

திமுக ஆட்சிக்கு 100க்கு 50 மதிப்பெண் வழங்கலாம் - பிரேமலதா விஜயகாந்த்

சாதிவெறி தான் ஆணவக்கொலைகளுக்கு அடிப்படை காரணம்.ஒட்டுமொத்த மக்கள் மனநிலையே மாறினால் தான் இது மாறும் எனப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.