தமிழ்நாடு

திருமண நிகழ்ச்சியில் கத்தியுடன் நடனமாடிய ரவுடி - கழிவறையில் வழுக்கி விழுந்ததில் காலில் மாவுக்கட்டு

வீடியோ காலில் கத்தியை காட்டி மிரட்டிய புதுமாப்பிள்ளை ரவுடி கைது

திருமண நிகழ்ச்சியில் கத்தியுடன் நடனமாடிய ரவுடி - கழிவறையில் வழுக்கி விழுந்ததில் காலில் மாவுக்கட்டு
திருமண நிகழ்ச்சியில் பட்டாகத்தியுடன் நடனம் ஆடிய ரவுடி கைது
சென்னையை அடுத்த மணலி சின்ன சேக்காட்டு பகுதியில் வைத்து புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொடுங்கையூரைச் சேர்ந்த ரவுடிகள் சஞ்சய் என்ற ஸ்பீடு சஞ்சய், சரவணன் என்ற கொண்டு சரவணன், முகமது ஜெய்லுல்லா, அக்டோடு ஆகாஷ் என்பது தெரியவந்தது.

வீடியோ காலில் கத்தியுடன் மிரட்டல்

இவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் சஞ்சய் மீது 13 வழக்குகளும், சரவணன் மீது 7 வழக்குகளும், முகமது மீது ஒரு வழக்கும், ஆகாஷ் மீது 4 வழக்குகளும் உள்ளது. மேலும் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ரவுடி சஞ்சய்யின் செல்போனை ஆய்வு செய்தனர்.

அதில் சஞ்சய் தனது எதிரியான சந்தோஷ் (எ) துப்பாக்கி சந்தோஷ் என்பவனை வீடியோ கால் செய்து ஆள்காட்டி வேலை செய்து வருகிறாயா? என்று கூறி மிரட்டும் வீடியோ இருந்தது. மேலும் கத்தியை காட்டி மிரட்டும் வீடியோக்கள் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் சஞ்சய்க்கு கடந்த சனிக்கிழமை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.அப்போது பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடும் வீடியோ இருந்தது.

காலில் மாவுக்கட்டு

இந்த நிலையில் சஞ்சய் கழிவறையில் வழுக்கி விழுந்ததாக கூறி போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் அவருக்கு இடது காலில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.