புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, திருமலை ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யக் குவிந்துள்ள பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் எனத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் புரட்டாசி மாதத்தில், பக்தர்கள் பலர் பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு, புரட்டாசி மாதத் தொடக்கத்திலேயே பக்தர்கள் கூட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்திற்காக வைகுண்ட க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிவதால், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால், இலவச தரிசனத்திற்கு 18 முதல் 24 மணி நேரம் வரை ஆகும் எனத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மூன்று மணி நேரமும், சர்வதரிசனம் டோக்கன் பெற்ற பக்தர்கள் ஏழு மணி நேரமும் காத்திருக்க வேண்டியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 63,067 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 23,856 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய நிலையில், உண்டியலில் ₹3.87 கோடி காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளது. தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.