K U M U D A M   N E W S

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.