ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி.. இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு பங்கேற்க மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு பங்கேற்க மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தாமதமாகியது. வியட்நாமில் எரிபொருள் நிரப்ப விமானத்தை தரையிறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூலை 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 8 நாள் சுற்றுப்பயணமாக வரை 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் இருநாட்டுகளின் உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உலகளாவிய நிலைப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தினேன் என்று கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசி வாயிலாக பேசியபோது மறுத்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆல்பர்ட்டாவின், கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியது போல், இஸ்ரேல் - ஈரான் இடையேயும் அமைதியை ஏற்படுத்துவேன். என்னுடைய தலையீட்டால் இஸ்ரேல்-ஈரான் போர் முடிவுக்கு வரும். பதற்றத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என சைப்ரஸில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 33 பேர் உயிரிழந்ததால் பலி எணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புக்கெட்டில் அவசர தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தகவல் வெளியானது.
முதலில், தான் இறந்துவிட்டதாக நினைத்ததாகவும், தான் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஷ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் குகேஷ் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக வைத்துள்ள குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்தியாவில் இருந்து துபாய்க்கு செம்மரக்கட்டைகளை கடத்தும் முக்கிய நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஐஃபோன்கள் தயாரிக்கப்பட்டாலும் 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.