K U M U D A M   N E W S

அமைச்சர்

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

பெண்கள் ஆதரவை குறைக்கவே விஜய் திமுக அரசை விமர்சிக்கிறார் - அமைச்சர் ரகுபதி

திமுகவிற்கு பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை குறைக்கவே திமுக அரசை பா.ஜ.க C- டீமான விஜய் குறை கூறுகிறார் என்று திருச்சியில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கோடை மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது அரியலூரில் புதிய வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லா பயணப் பேருந்துகளை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா போன இடத்தில் விபத்து..அதிமுக முன்னாள் அமைச்சரின் பேத்தி உயிரிழப்பு!

அ.தி.மு.க வின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யபிரியா, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை கல்லார் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நண்பா நண்பீஷ் ரெடியா இருங்க.. திமுகவில் இணைந்த தவெக பிரபலம் வைஷ்ணவி

கட்சி பணிகளில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி தவெகவிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது- அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ஆள தெரியாத மோடி.. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி

ஆள தெரியாத மோடி இந்தியாவை ஆள வந்ததற்கு பிறகு தான் பெரிதளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், மதக் கலவரத்தை தூண்டுவது சிறுபான்மையினரை நசுக்குவது போன்ற செயலில் தான் மோடி கவனம் செலுத்துவதாகவும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டியளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு.. அமைச்சர் சிவசங்கர் கொடுத்த அப்டேட்!

எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.

தங்கமணியே தப்பு செய்றாருங்க..கொதிக்கும் ரத்தங்கள்: அடக்கும் எடப்பாடி

எடப்பாடியுடனான நெருக்கத்தை கொஞ்ச காலமாக குறைத்திருக்கும் மாஜி அமைச்சர் தங்கமணி மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் - ராஜ்நாத்சிங்

பயங்கரவாத நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இலாகா மாற்றம்...அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

எடப்பாடி பழனிசாமி தூங்கிக்கொண்டிருக்கிறார்...அமைச்சர் ரகுபதி சாடல்

திராவிட மாடல் ஆட்சியில் மதுரை ஆதீனத்திற்கு எந்தவித அச்சுறுத்தாலும் கிடையாது.

உலகிலேயே முதன்முறையாக... தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ்!

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் செய்யும் வசதி கொண்டுவர உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறியுள்ளது-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சிக்காலத்தில் யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து.. நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பஹல்காம் தாக்குதல் மற்றும் எல்லையில் நிலவும் சூழல் குறித்தும் முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

சிறுபான்மை மக்களுக்கு முதலமைச்சர் நேசக்கரம் நீட்டுகிறார்- அமைச்சர் சா.மு.நாசர்

மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார் போப் ஆண்டவர் என அமைச்சர் நாசர் பேட்டி

கோவையில் ஜல்லிக்கட்டு.. 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

கோவையில் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கருணாநிதி சொன்னதை பேரவையில் நினைவுகூர்ந்த அமைச்சர் துரைமுருகன்...உற்று கவனித்த முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி குறித்து கருணாநிதி சொன்னதை பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நினைவுகூர்ந்ததை முதலமைச்சர் உற்று கவனித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா–அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு விழா எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கு.. புதிய சிக்கலில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.