நானும் தந்தைதான்.. மாணவர்கள் திசை மாறக்கூடாது.. முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

பள்ளிப் படிப்பை முடிக்கும் ஒரு மாணவர் கூட உயர்கல்வி படிக்காமல் திசைமாறி சென்றுவிடக் கூடாது. தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Aug 9, 2024 - 12:34
 0
நானும் தந்தைதான்.. மாணவர்கள் திசை மாறக்கூடாது.. முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
cm speech tamil pudalvan thittam

கோவை: ஒரு தந்தையாக இருந்து தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடக்க விழாவுக்கு வரும் முன்பே மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்க நேற்றே உத்தரவிட்டேன். உங்க எல்லோருக்கும் எஸ்எம்எஸ் வந்துச்சா என்று உரிமையோடு கேட்டார் முதல்வர் ஸ்டாலின்.

மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர்,நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் ஒரு சில திட்டங்கள்தான் நமது மனதுக்கு நெருக்கமாக இருக்கும். தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க நான் தேர்ந்தெடுத்த இடம் கோவை மண்டலம. அன்பான, பாசமான, சேவை மனப்பான்மை கொண்ட மக்கள் கோவை மக்கள். இந்தியாவில் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலம் என்று கூறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 

இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ள திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடுதான் நமது நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது. பெண்களுக்கு பேருந்தில் கட்டணமில்லாமல் செல்லும் வசதியை உருவாக்கி கொடுத்துள்ளோம். மகளிருக்கு விடியல் தரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

திராவிட மாடல் அரசு என்றாலே அது சமூக நீதிக்கான அரசு தான். 28 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு பெறுவதை உறுதிசெய்துள்ளோம். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு பெறுவதை உறுதிசெய்துள்ளோம். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உருவாக்கப்பட்ட திட்டம்தான் தமிழ்ப் புதல்வன் திட்டம்.

ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் நோக்கத்தோடு தமிழ்ப் புதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலை கல்லூரிகள், 4 ஆண்டு பொறியியல், 5 ஆண்டு மருத்துவ படிப்பு, 3 ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தில் பயனடையும் மாணவர்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் கவனமாக கண்காணிப்பேன். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயனடையும் மாணவர்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் கவனமாக கண்காணிப்பேன்.

பள்ளிப் படிப்பை முடிக்கும் ஒரு மாணவர் கூட உயர்கல்வி படிக்காமல் திசைமாறி சென்றுவிடக் கூடாது. தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். தடங்கலை உடைத்து எறிந்து மாணவர்கள் முன்னேற திராவிட மாடல் அரசு துணை நிற்கும். அனைவரும் பாராட்டக்கூடிய அளவுக்கு வினேஷ் போகத் வெற்றிபெற்றுள்ளார். வெற்றி ஒன்றே மாணவர்களுக்கு குறியாக இருக்க வேண்டும், மாணவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow