2025 ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கடந்த மாதம் மார்ச் 22 ஆம் தேதி 10 அணிகளுடன் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றையப்போட்டியில், சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
தொடர் தோல்வியில் சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில், தங்களுடைய முதல் போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற லீக் போட்டிகளில் சென்னை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் பார்டனர்ஷிப் அமையாததால் பவர்ப்ளேயில் ரன்களை எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. மிடில் ஆர்டரிலும் பலமில்லாமல் எதிரணி நிர்ணயித்த ரன்களை எட்டிப்பிடிக்க முடியாமல் போராடுகிறது.
சேஸிங்கில் சொதப்பும் சிஎஸ்கே
சென்னை அணி கடந்த சில வருடங்களாக 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யமுடியாமல்
தவித்து வருகிறது. நடப்பு சீசனில், கேப்டன் ருத்துராஜ் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்காமல் 3வது வீரராக களமிறங்குகிறார். ஷிவம் துபே, ரச்சின், விஜய் சங்கர் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளில் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்தப்போட்டி சண்டிகரில் நடைபெறுவதால், பஞ்சாப் அணிக்கு இப்போட்டி சாதகமாக உள்ளது. ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார்போர்ட்ஸ் இரண்டிலும் நேரலையில் பார்க்கலாம்.
ஐபிஎல் 2025
PBKS Vs CSK: தோல்வியிலிருந்து மீளுமா CSK.. பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.