Hema Committee Report : ஹேமா கமிஷன் அறிக்கை தாக்கல்.. கேரளா அரசை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்

Hema Committee Report Submitted in Kerala High Court : மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை சீலடப்பட்ட உறையில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Sep 10, 2024 - 15:12
Sep 11, 2024 - 09:49
 0
Hema Committee Report : ஹேமா கமிஷன் அறிக்கை தாக்கல்.. கேரளா அரசை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்
hema committee report kerala high court

Hema Committee Report Submitted in Kerala High Court : மலையாள திரை உலகத்தில் போக்சோ உள்ளிட்ட பல பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளது  ஹேமா கமிட்டி அறிக்கை. 2021ம் ஆண்டு டிஜிபியிடம் வழங்கப்பட்டும் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் இதுவரை விசாரணை தொடங்கவில்லை? என்று ஹைகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கையில் பல்வேறு ரகசிய விசாரணை விபரங்கள் இருப்பதால் அதனை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டு மலையாள பட உலகின் பிரபல நடிகையை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் 2017ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நடிகைகள் பார்வதி திருவோத்து, ரேவதி, பத்மப்பிரியா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் இணைந்து ‘உமன் இன் சினிமா கலெக்டீவ்ஸ்’ என்ற குழுவை ஏற்படுத்தினர். இவர்கள் ஒருங்கிணைந்து மலையாள சினிமாவில் நடிகைகள், பெண் கலைஞர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை எதிர்த்து குரல் கொடுக்க துவங்கினர்.

கடந்த 2019ம் ஆண்டு முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, பெண் கலைஞர்கள் மீதான பாலியல் தொல்லைகள் களைய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடும்படி கேட்டனர். அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா குமாரி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் முன்னணி நடிகைககள் உள்பட 53 பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி 2019ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை சமர்ப்பித்தது.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பார்த்துக்கொண்டனர். இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பலர் இந்த அறிக்கையை வெளியிட கோரி வந்தனர். இதை விசாரித்த கேரள தகவல் உரிமை ஆணையம் ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை அடுத்து ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை கேரளா மட்டுமின்றி இந்திய திரையுலகையே உலுக்கியது. இந்த நிலையில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை இன்று சீலிடப்பட்ட உறையில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசை மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.4 ஆண்டுகளாக ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

ஹேமா கமிட்டி அறிக்கையை சீலிட்ட கவரில் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.  திரை உலகம் மட்டுமல்லாது பொது இடங்களில் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தது?.  அமைப்புசாரா தொழில்களில் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுக்க கேரளா அரசு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும். ஹேமா கமிட்டி தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தக் கூடாது.

ஹேமா கமிட்டி அறிக்கையை முன்வைத்து ஊடகங்கள் விசாரணை நடத்தக் கூடாது. ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது; ஆனால் ஊடகங்களுக்கு எப்படி கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் தெரியும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow