விஜய்யின் அரசியல் வருகை...டான்ஸ் மாஸ்டர் கலா கருத்து
விஜய்யின் அரசியல் வருகை நன்றாக உள்ளதாக கூறினார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை நன்றாக இருந்தாலும், கடவுள் என்ன நினைக்கிறோரோ அது தான் நடக்கும் என ஈரோட்டில் உள்ள காலபரைவர் கோவிலில் சாமி தரிசனம் செய்த திரைப்பட நடன இயக்குநர் கலா தெரிவித்தார்.
சாமி தரிசனம்
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அடுத்து ராட்டைசுற்றிப்பாளையத்தில் அமைந்துள்ள தென்னக காசி பைரவர் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவ ஆலயத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஈரோடு,கரூர், நாமக்கல்,திருப்பூர் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கொண்டு, கால பைரவருக்கு தங்களது கைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
Read more: மேட்டுப்பாளையத்தை குளிர்வித்த கோடைமழை..வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
இதே போல கோவிலுக்கு வருகை தந்த திரைப்பட நடன இயக்குநர் கலா, கோவிலின் கருவறைக்குள் சென்று தனது கைகளால் பால் அபிஷேகம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனையடுத்து கோவிலில் இருந்த பக்தர்கள் நடன இயக்குநர் கலாவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
விஜய் நல்லவர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடன இயக்குநர் கலா , திரைத்துறையில் நல்ல படங்களை தேர்வுத்செய்து பணியாற்றி வருவதாகவும் , திரைப்படத்தில் ஆபாசமான ஆடைகளுடன் நடனம் இருப்பதற்கு இயக்குநர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் தான் காரணம் என்றும் படத்தின் சூழல் பொறுத்து தான் பாடலின் நடனம் அமைவதால், பார்க்கக்கூடிய பார்வை நல்ல பார்வையாக இருந்தால் எதுவும் தவறாக தோன்றாது என கூறினார்.
Read more: கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் திருவிழா..முதல்போட்டியில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது RCB
மேலும் உலகம் கடல் மாதிரி பெரிது, இதில் யார் வேண்டுமானாலும் வரலாம், ஜெயிக்கலாம். நடிகர் விஜய்யுடன் திரைப்படம் தொடர்பாக வேலை செய்து உள்ளேன், அவர் நல்லவர் என்றும் விஜய்யின் அரசியல் வருகை நன்றாக உள்ளதாக கூறினார். மேலும் அரசியலுக்கு யார் வந்தாலும் கடவுள் என்ன நினைக்கிறாரோ அது தான் நடக்கும் என தெரிவித்தார்.
What's Your Reaction?






