மேட்டுப்பாளையத்தை குளிர்வித்த கோடைமழை..வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று மாலை பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது

Mar 22, 2025 - 20:34
Mar 22, 2025 - 20:35
 0
மேட்டுப்பாளையத்தை குளிர்வித்த கோடைமழை..வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

கனமழை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகரித்தே இருந்தது.ஆனால் பிற்பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம்  மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

Read more:மதுரையில் பச்சிளம் பெண் சிசுவிற்கு நேர்ந்த சோகம்...விசாரணையை தொடங்கிய போலீஸ்

பின்னர் மாலை 5  மணியளவில் மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்ய துவங்கிய நிலையில் நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.மழையுடன் பலத்த காற்றும் வீசியது.இடி மின்னலுடன் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

குளிர்ச்சியான சூழல்

சாரல் மழை மற்றும் பின்னர் இடி மின்னலுடன் பலத்த மழை என குளிர்ந்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை பொழிந்ததால் இப்பகுதியில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.அதே நேரத்தில் மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசியதால் ஆங்காங்கே வாழை மரங்கள் சாய்ந்தன.

Read more: கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் திருவிழா..முதல்போட்டியில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது RCB

மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று மாலை பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவி வருவது மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow