வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் குறித்த மனு.. ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வெள்ளிப் பதக்கம் கோரிய மனு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வெள்ளிப் பதக்கம் கோரிய மனு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Pakistan Gold Medalist Arshad Nadeem Buffalo Gift : ''எங்களது சமுதாயத்தில் எருமை மாட்டை பரிசாக வழங்குவது என்பது மிகவும் மதிப்புமிக்க, மரியாதைக்குரிய செயலாகும்'' என்று அர்ஷத் நதீமின் மாமனார் முகமது நவாஸ் கூறியுள்ளார்.
VCK Party case filed against Actor Ranjith : கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ள ரஞ்சித், ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறை தான் என பேசி சர்ச்சையில் சிக்கினார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது விசிக சார்பில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Paris Olympics 2024 : கோலாகலமாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024, இன்று அதிகாலை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதோடு நிறைவடைந்தது.
Paris Olympics 2024 : இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. ஓலிம்பிக் நிறைவு விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் இரட்டை பதக்க நாயகி மனு பாக்கர் மற்றும் ஹாக்கி அணியில் வெண்கலம் வென்ற ஸ்ரீஜேஷ் ஆகியோர் நமது தேசியக்கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர்.
''ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றபோது, தொடக்கத்தில் அந்த பதக்கம் பளபளப்புடன் இருந்தது. ஆனால் வீட்டுக்கு வந்த ஒரு வாரத்துக்குள் பதக்கம் வெளுத்து விட்டது'' என்று அமெரிக்க வீரர் நிஜா ஹஸ்டன் கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Actor Ranjith about Honour Killing : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ரசிகர்களுடன் பார்த்த ரஞ்சித், ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறை தான் என பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 55 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில், 21 வயதான இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கமும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கமும் வென்றனர். இதனையடுத்து இரு வீரர்கள் அம்மாக்களும் நெகிழ்ச்சியாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பராகுவே நாட்டு இளம் நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சா ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவரது அழகால் வீரர்களின் கவனம் சிதறுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை அது இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது.
Actor Ranjith about Kavundapalayam movie Issue : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அறிவு முதிர்ச்சி இல்லாதவர்கள் பார்க்க வர வேண்டாம் என ரஞ்சித் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, ஒலிம்பிக் தொடர் முடிவதற்குள் இறுதி செய்யப்படும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கத் திறனற்ற திமுக அரசு, மகிழுந்து பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தற்போது நடைபெற்ற ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர். ''வினேஷ் போகத் நீங்கள் இப்போதே தங்கம் வென்று விட்டீர்கள். வலிமையுடன் திரும்பி வாருங்கள். நாடே உங்களுடன் இருக்கிறது'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.
ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ்போகத்தை, இந்தியத் தடகள விளையாட்டு வீராங்கனையும் பி.டி. உஷா நேரில் சந்தித்து உரையாடினார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில், சதி இருப்பதாக குத்துச் சண்டை வீரர் விஜேந்திர சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகத் தீவிர உடற்பயிற்சியின் மூலம் ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில் ,100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.
மனு பாக்கர் வந்த ஏர் இந்தியா விமானம் 1 மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு வந்தது. ஆனால் இதையும் பொருட்படுத்தாமல், லேசாக தூறிய மழைக்கு மத்தியிலும் விமான நிலையத்தில் காத்திருந்த மக்கள் இரட்டை பதக்க மங்கைக்கு மிகப்பெரும் வரவேற்பு கொடுத்தனர்.
ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிய நிலையில், இரு அணி வீரர்களும் 3வது கோல் அடிக்க போராடினார்கள். ஆனால் 54வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்க்கோ 3வது கோல் அடித்து இந்திய ரசிகர்களின் மனதில் ஈட்டியை பாய்ச்சினார்.
Vinesh Phogat, Neeraj Chopra in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில், இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அதேபோல, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.
India vs Germany Match in Paris Olympics Schedule Today 2024 in Tamil : இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்கும் டேபிள் டென்னிஸ் ஆண்களுக்கான பிரிவு தொடக்க சுற்றில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன. மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினோத் போகத் மற்றும் ஜப்பானின் கசாகி யூ பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், மற்றும் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகேஸ்வரி சவுகான், அனந்த்ஜித் சிங் இணை தோல்வியை தழுவின.