திருமாவளவன் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கட்சி நிகழ்ச்சிக்காக வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
முன்னதாக திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் தரிசனம் செய்த அவர் தொடர்ந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை சாமி தரிசனம் செய்தார். பின்னர் பல்வேறு சாமிகளை தரிசனம் செய்தார்.
மாலை அணிவித்து மரியாதை
தொடர்ந்து திருக்கோவில் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருக்கோவிலுக்கு வந்திருந்த தொல்.திருமாவளவனுடன் பொதுமக்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.