சென்னை திருவல்லிக்கேணி பச்சையப்பன் தெரு பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த 2 ஆம் தேதி சையது, தீபக் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சிகுமுசு நூவானி, உக்காந்துக்கோவா பெறுநது, ஒக்கி பினு சுப்ரீம் மற்றும் பெங்களூரில் சேர்ந்த கிரண் பனிக்கர் ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4.5 கிராம் மெத்தபெட்டமைன், ஹெராயின், 300 கிராம் கஞ்சா, 13 சிரஞ்சீகள் இரண்டு எடை மேடை, 6 செல்போன், 7500 ரூபாய் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், சென்னை தரமணி பகுதியில் ஹெராயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தரமணி சிஎஸ்ஐஆர் சாலை அருகே ஹெராயன் போதை பொருள் விற்பனை செய்ததாக திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அனுவார் ஹுசைன், ரிமைன் தி வேரா, அஜய் குமார், ஜெஸ்வின் மியா, மற்றும் நஜிருல் ஹுசைன் ஆகியோரை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கிராம் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல, சென்னை அண்ணா சாலை ஒயிட்ஸ் சாலை- சுமித் சாலை சந்திப்பில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்ததாக கடந்த மாதம் 9 ஆம் தேதி முகமது சுகில், விக்னேஸ்வரன், யுவராஜ், பிரவீன், பாலச்சந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். கூட்டாளிகளை கைது செய்ய தனிப்படை போலீசார் பெங்களூர் சென்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டபர் முயுக்கா, சமீர் சல்ஹா நூருதீன், எடிட்ம் இட்டா, இஃபாங் , அட்டெண்டா ஷூக், மற்றும் பெங்களூரை சேர்ந்த இம்ரான் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆறு கிராம் மெத்தபெட்டமைன், 250 கிராம் கஞ்சா, இரண்டு எடை மெஷின், நான்கு லேப்டாப், 8 செல்போன், 5 பாஸ்போர்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து சென்னை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு
சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் கைது.. போலீசார் அதிரடி
சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் நைஜீரியா நாட்டு கும்பல், திரிபுரா மாநில கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.