விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ்
தஞ்சை அடுத்த நடுக்காவேரி அரச மர தெருவில் வசித்து வருபவர் தினேஷ். நேற்று காலை நடுக்காவேரி காவல் நிலையத்தில் வந்த காவல்துறையினர் தினேஷை குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி காவல் நிலையம் அழைத்துச்சென்றுள்ளனர்.
இதனை அறிந்த தினேஷின் சகோதரிகள் கீர்த்திகா, மேனகா இருவரும் நடுக்காவேரி காவல் நிலையம் சென்று விவரம் கேட்டுள்ளனர். இவர்களில் கிருத்திகா பி.டெக் பொறியியல் பட்டதாரி ஆவார்.காவல் ஆய்வாளர் ஷர்மிளா இருவரையும் தர குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது இதனால் அவமானம் அடைந்த சகோதரிகள் இருவரும் காவல் நிலையம் வாயில் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
பதற்றம்...போலீஸ் குவிப்பு
இதனை அறிந்து அங்கு வந்த உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சகோதரிகள் இருவரையும் மீட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் கீர்த்திகா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மேனகா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கீர்த்திகா உயிரிழந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டு உள்ளனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.தினேஷ் மீது கொலை முயற்சி, மணல் கடத்தல் உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தஞ்சை, திருவாருர் மாவட்டங்களில் உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாடு
தம்பியை விடுவிக்கக்கோரி சகோதரிகள் விபரீத செயல்...தஞ்சையில் பதற்றம்-போலீஸ் குவிப்பு
தினேஷ் மீது கொலை முயற்சி, மணல் கடத்தல் உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தஞ்சை, திருவாருர் மாவட்டங்களில் உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.