தமிழ்நாடு

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்...தப்பியோடியபோது கை, காலில் எலும்பு முறிவு

பணம் பறிக்கும் நோக்கில் சென்று மூதாட்டியிடம் பணம்கேட்டு இல்லையென கூறிய நிலையில், மதுபோதையில் சபலத்தால் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கைது செய்யப்பட்ட நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்...தப்பியோடியபோது கை, காலில் எலும்பு முறிவு

பாலியல் வன்கொடுமை

சென்னை ஜாம்பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் முதல் தளத்தில் 80 மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில், காலை உணவு எடுத்து வந்து தனது தாயாருக்கு கொடுப்பது வழக்கம்.அதுபோல கடந்த 7ம் தேதி காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு தாழ்பாள் போடாமல் இருந்துள்ளது.

வீட்டினுள் நுழைந்தவுடன் மூதாட்டி ஆடைகள் களைத்து காயங்களோடு மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகள், உடனடியாக மூதாட்டியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.உடலில் மார்பு உள்ளிட்ட பல இடங்களில் நகக்கீறல்கள் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் மூதாட்டியை பரிசோதனை செய்த போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கொலை மிரட்டல்

உடனடியாக ஜாம்பஜார் காவல்நிலையத்திக்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் ஜாம் பஜார் போலீசாரின் விசாரணையில் 80 வயது மூதாட்டி கடுமையாக தாக்கபட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், மூதாட்டி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தான் முதல் தளத்தில் வசித்து வருவதாகவும், 6ம் தேதி இரவு கதவையும், ஜன்னலையும் யாரோ உடைப்பது போல இருந்ததாகவும், யார் எனக்கேட்டு கதவை திறந்த போது உள்ளே நுழைந்த வெள்ளை டீ-சர்ட் அணிந்து இருந்த நபர் தனது தாடையில் குத்தி தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், மேலும் தன்னை கீழே தள்ளி தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும், இல்லையெனக் கூறியபோது தன்னை மீண்டும் தாக்கிவிட்டு, நடந்ததை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும், மீண்டும் நாளை வருவேன் எனக்கூறி விட்டு சென்றதாகவும், தன்னால் எழுந்து நடக்க முடியாத நிலையில் மயங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கைதானவர் வாக்குமூலம்

மூதாட்டி கூறிய அடையாளங்களை வைத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் (40) என்பதும், மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

போலீசார் தொடர் விசாரணையில், வேலைக்காக சில நாட்களாக ஜாம்பஜார் பகுதியில் தங்கியுள்ளதும், வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், திருவள்ளூரில் இருந்து விளம்பர போர்டுகளுக்கு பிரேம் வொர்க் செய்யும் வெல்டிங் வேலைக்காக வந்தாகவும், மதுபோதையில் சாலையில் நடந்து சென்றபோது மூதாட்டியை பார்த்ததாகவும், பணம் பறிக்கும் நோக்கில் சென்று மூதாட்டியிடம் பணம்கேட்டு இல்லையென கூறிய நிலையில் மதுபோதையில் சபலத்தால் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கைது செய்யப்பட்ட நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கை, கால் எலும்பு முறிவு

முன்னதாக நாகராஜை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்ட போலீசார் திருவள்ளூர் பகுதியில் வைத்து அவரை கைது செய்யமுற்பட்டபோது, போலீசாரிடம் தப்பிக்க நினைத்து ஓடியுள்ளார். அப்போது தவறி விழுந்ததில் நாகராஜுக்கு இடது கை மற்றும் வலது கால் முறிந்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நாகராஜை சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கி உத்தரவிட்டது. பின்னர், நாகராஜை ஜாம் பஜார் போலீசார் சிறையில் அடைத்தனர்.