K U M U D A M   N E W S
Promotional Banner

உள்ளாட்சி சாலைப் பணி நிதியில் ரூ.78 லட்சம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது!

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு தனது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இன்று ஆயுள் தண்டனை வழங்கிச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரூ.35 லட்சம் நில விவகாரம்.. மன்சூர் அலிகான் மகன் தகராறு.. போலீசார் விசாரணை!

நடிகர் மன்சூர் அலிகான் நிலத்திற்காக்நிலம் வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை வாங்கி விட்டு இடத்தை தரவில்லை இடத்தின் உரிமையாளரிடம் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுமி பாலியல் வழக்கு... குற்றவாளியைப் பிடிக்க ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்த காவல்துறை!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் நபர்குறித்து நம்பகமான தகவல் வழங்குவோருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி என்று காவல்துறை அறிவித்துள்ளது. சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி மோசடி.. வங்கி இஎம்ஐ மூலம் போலீஸிடம் சிக்கிய மோசடி மன்னன்!

அரசு தொடர்பான வேலைகளையும், சொத்தையும் மீட்டுத் தருவதாகக் கூறி 62.8 லட்சம் மோசடி செய்த மோசடி மன்னன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்… அக்ஷய் குமார் எடுத்த அதிரடி முடிவு!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது திரைப்படங்களில் செய்யும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்காகப் பிரபலமானவர் தற்போது அவர் எடுத்துள்ள மனிதாபிமான முடிவு திரைப்படத் துறையில் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது

மலேசியா, துபாயிலிருந்து சட்டவிரோத சிகரெட் கடத்தல்: சுங்கத்துறை அதிரடி சோதனை!

மலேசியா மற்றும் துபாய் நாடுகளிலிருந்து விமானங்களில் 13 கொரியர் பார்சல் மூலம் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புடைய 2,31,400 சிக்ரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

சித்ரகுப்த சுவாமி கோயில் தேங்காய் கடை ரூ.30 லட்சத்திற்கு ஏலம்!

சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் தேங்காய், பூ, மற்றும் பழம் விற்பணை செய்யும் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 21 லட்சத்திற்கு மேல் ஏலம் போன நிலையில், தற்போது, சுமார் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் மாறி மாறி ஏலத்தாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதால் அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரு சாமி நீ.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டியின் பேன்சி நம்பருக்கு ரூ14 லட்சமா?

இமாச்சல பிரதேசத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.14 லட்சம் கொடுத்து HP21C-0001 என்ற ஃபேன்சி எண்ணை சஞ்சீவ் என்ற நபர் வாங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் யாரு சாமி நீ , ரொம்ப வசதியா இருப்பாரோ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஐ.பி.எல் சூதாட்டம்: ஒருவர் கைது - ரூ.96 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

கோவையில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் சொத்து, 46 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த மனசுதான் சார் கடவுள்: சாலையில் கிடந்த ரூ.2 லட்சம்.. கொத்தனாருக்கு குவியும் பாராட்டு

சாலையில் கிடந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கொத்தனார் வேலை செய்து வரும் நபர் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

400 முறை தோப்புக்கரணம்... ஆசிரியைக்கு 2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்!

வீட்டுப்பாடம் செய்து வராததால் 400 முறை தோப்புக்கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியைக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடரும் சைபர் கிரைம் மோசடி.. போலி ஆன்லைன் ரூ.90 லட்சம் திருடிய 2 பேர் கைது!

போலி ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மூலம் ரூ. 90 லட்சத்தை திருடிய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மோசடி கும்பல் திருடிய பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றியது விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

அண்ணாமலையார் கோயில்: ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை.. பக்தரின் செயலால் நெகிழ்ச்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் வைரக்கல், பச்சைக்கல், மரகத பச்சை ஆகியவற்றினால் ஆன தங்க ஆபரணங்களை பக்தர் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரயிலில் துணை நடிகையிடம் திருடிய காவலர்... ரயில்வே போலீசார் விசாரனை

ஓடும் ரயிலில்  தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு லட்சம் நகைகள் அடங்கிய கைப்பையை திருடிய காவலரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.