சென்னை மாதவரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், வலைதளத்தின் நம்பகத் தன்மையை சரி பார்க்காமல் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு போலி ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் மொத்தம் ரூபாய் 90,77,800 போலியான பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்தாகவும், உரிய விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
புகார் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் மோசடியில் ஈடுபட்டதாக சேலத்தைச் சேர்ந்த அருண் குமார் சேலத்திலும் , கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரை சென்னையிலும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை Binance செயலி மூலம் கிரிப்டோகரன்சியாக மாற்றி 25 சதவிதம் வரை கமிஷன் பெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கைதான 2 பேரையும் போலீசார் சென்னை, சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
"இணையதளங்கள் மூலம் முதலீடு செய்யும் போதும் அவற்றை பார்வையிடும் போதும் அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு தங்களது பணத்தை யாரிடமும் அனுப்பவேண்டாம். மேலும் நேரில் பார்க்காமலும் தீர விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய நபர்களிடம் பணம் எதுவும் கொடுக்கவோ அல்லது இணையவழியாகவோ செலுத்த வேண்டாம் என்றும், அதிகப்படியான கமிஷன் என்று ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறக்கூடாது என்றும் சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சைபர் குற்றங்களை 1930 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் மற்றும் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.