சினிமா

போதைக்கு அடிமையா? அதிகாலை வெளியான புதிய வீடியோ..நடிகர் ஸ்ரீ கொடுத்த விளக்கம்!

நடிகர் ஸ்ரீ ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருப்பதற்கு போதை பழக்கமே காரணம் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். அவருடை இந்நிலைக்கு காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

போதைக்கு அடிமையா? அதிகாலை வெளியான புதிய வீடியோ..நடிகர் ஸ்ரீ கொடுத்த விளக்கம்!
சிறந்த கதை, சிறந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தும் நடிகர் ஸ்ரீ-க்கு பெண் ரசிகர்கள் மட்டுமின்றி ஆண் ரசிகர்களும் உள்ளனர். இப்படியான ஒருவர் தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெகு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், அனைவரின் நினைவிலும் இருக்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர், நடிகர் ஸ்ரீராம் நடராஜன் எனப்படும் ஸ்ரீ. வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இருகப்பற்று, வில் அம்பு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நல்ல பரீட்சையமான முகமாகவே மாறிப்போனார். ஸ்ரீ இருக்கிறாரா/ அப்போ கதையும் படமும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை சினிமா ரசிகர்களுக்கு இன்றளவும் இருக்கிறது.

இவர் பிக்பாஸிற்கு வந்தபோது, நிறைய பேர் அவரை ஆதரித்தனர். அதன்பிறகு பொது நிகழ்ச்சிகளில் அவரை காண முடியவில்லை என்றாலும், ரசிகர்களுக்கான நல்ல படங்களை கொடுக்க அவர் தவறியதில்லை. இந்த நிலையில், நடிகர் ஸ்ரீயின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் அவர் மீது கவலை கொள்ளச் செய்துள்ளன.

அண்மையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றே சொல்லவேண்டும். அரைகுறையான ஆடைகளுடன், தலைமுடிக்கு கலரிங் செய்து, எலும்புகள் தெரியும் வண்ணம் மெலிந்த தேகத்துடன் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்ததை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலாடையில்லாமல் பல புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகர் ஸ்ரீ தனக்கு அழகான பெண்கள் மற்றும் பெண்ணாக மாறிய ஆண்கள் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றும் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ போன்ற ஒரு திறமையான நடிகருக்கு இப்படி ஒரு நிலையா என ரசிகர்கள் பலரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”என்ன தான்யா ஆச்சு உனக்கு?”, படவாய்ப்புகள் இல்லாததால் இப்படு ஆகிவிட்டாரா என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், ஸ்ரீ இப்படி ஆவதற்கு போதை பழக்கம் தான் காரணமா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வந்தனர்.



இதற்கு பதிலளிக்கும் விதமாக, தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ஸ்ரீ. அந்த வீடியோவில், நான் புகைப்பழக்கத்தை விட்டு 1 வருடம், 4 மாதம், 16 நாட்கள் ஆகிறது. இப்படியான ஒரு கெட்ட பழக்கத்தை கைவிட்டதை எண்ணி பெருமைக்கொள்கிறேன்..” என பதிவிட்டுள்ளார். இதனால், ஒருபக்கம் அவரை ரசிகர்கள் பாராட்டி வந்தாலும், இவர் இப்படி மாற போதை பழக்கம் காரணம் இல்லை என்றால் வேறு என்னதான் காரணம் என குழம்பி வருகின்றனர்.