K U M U D A M   N E W S
Promotional Banner

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை(ஜூன்4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சத்தீஸ்கரில் பழங்குடியினர் மீது மனித உரிமை மீறல்..சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கையை கண்டித்து நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக மாமல்லபுரத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடுவோம்-திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது - கீ. வீரமணி

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு எடுத்த சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்று திராவிட கழக தலைவர் கீ. வீரமணி தெரிவித்துள்ளார்.

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!

போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி 1.65 கோடி மோசடி.. தலைமறைவாக இருந்தவர் கைது!

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்...3 பேரை பிடித்து விசாரணை

ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் குழு இன்று ரஷ்யா பயணம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யாவிடம் விளக்க உள்ளது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழப்பு

கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் ஆற்றில் பெருக்கெடுத்த காவிரி – வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீர் அதிகரித்து காணப்படுகிறது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் - ராஜ்நாத்சிங்

பயங்கரவாத நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

துணைவேந்தர்கள் நியமனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர்: நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதில் பல்வேறு தகவல்களை பகிர்வார் என்று கூறப்படுகிறது

கையெறி குண்டுகளுடன் டிரோன்கள்..தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..!

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

போர் பதற்றம்: எதையெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது...மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

போர் பாதுகாப்பு ஒத்திகை...இருளில் மூழ்கியது டெல்லி

போர் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக டெல்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு...மத்திய அரசு உத்தரவு

மே 2023ல் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பொறுப்பை பிரவீன் சூட் ஏற்றுக்கொண்டார்.

சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்...மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மீனவர்கள் மீதான தாக்குதல்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை...மத்திய அரசு உத்தரவு

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் - தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுகின்றனர் - முதலமைச்சர் உவமை

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுவதாகவும், அவர்களின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழக அரசு சாதனை படைத்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல்: "பிரார்த்தனை செய்கிறேன்"...நடிகர் அஜித்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.