இந்தியா

ஆப்ரேஷன் சிந்தூர்: நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதில் பல்வேறு தகவல்களை பகிர்வார் என்று கூறப்படுகிறது

ஆப்ரேஷன் சிந்தூர்: நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக உரையாற்றும் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி இன்று உரை

எல்லை பாதுகாப்பு தொடர்பாக முப்படை தளபதிகளுடன் காலையில் ஆலோசித்த பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு உரைக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். ஆப்ரேசன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ள பிரதமர் மோடி, முக்கிய தகவல்களை பகிர்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் ராஜீவ் காய், ஏகே பார்தி, பிரமோத் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அவர்கள், தீவிரவாதிகளை குறிவைத்ததுதான் தான் தாக்குதல் நடத்தப்பட்டது. நமது சண்டை பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரானதல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிரானது. பயங்கரவாதிகளின் நிலைகள்தான் இந்திய ராணுவத்தின் எதிரி. ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் நம் மீது தாக்குதல் நடத்தியது.

பாக்.ஏவுகணைகள் அழிப்பு

எல்லையை பாதுகாக்க அனைத்து வகையிலும் இந்திய ராணுவம் உறுதி பூண்டிருந்தது. மேலும், பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளின் வீடியோவை வெளியிட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஆபரேஷன் சிந்தூரில் வான் பாதுகாப்பு அமைப்புகள் பிரதான கேடயங்களாக செயல்பட்டன. மேலும், பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் மறித்து அழிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டிருந்தது. ஆகையால் பிரதமர் மோடியின் இன்றைய உரை மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதமரின் உரையில் சண்டை நிறுத்த ஒப்புதல் ஏன்? அமெரிக்க அதிபரின் சமாதானம் மற்றும் பாகிஸ்தான் அத்துமீறல், ஆப்ரேஷன் சிந்தூர் அதிரடி நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.