அரசியல்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை  தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நாகர்கோவிலில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் இன்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளது.

பின் தங்கிய பட்டியலின மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் புதிய கல்விக் கொள்கை உள்ளது மூன்றாவது மொழியை ஏன் கற்றுக் கொள்ளக் கூடாது என சொல்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் ஆங்கில மொழி தேவை இல்லை அது அந்நிய மொழி எனவே அந்த மொழி தேவை இல்லை ஆங்கிலம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என சொல்கிறார். தமிழக மாணவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.அதற்கு முக்கியமான காரணம் ஆங்கில புலமை இரு மொழி கொள்கை தான் காரணம். உலகத் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தை உள்துறை அமைச்சர் தேவை இல்லை என கூறுகிறார் வடமாநிலத்தில் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளக் கூடாது என பிரச்சாரம் செய்கின்றனர்.

இதனை தமிழக பாஜக தலைவர் ஏற்றுக் கொள்வாரா என துரை வைகோ கேள்வி எழுப்பினார். வடமாநிலத்தில் பல மொழிகள் அழிந்து போய் உள்ளன இதற்கு இந்தி ஆதிக்கமே காரணம். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது மக்களை பாதிக்கின்ற வகையில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர அனுமதிக்க கூடாது என தெரிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் இங்குள்ள அரசியல் கட்சியினர், மற்றும் அப்பகுதி மக்களிடம் ஆலோசனை செய்து விட்டு அதற்கு உண்டான பாதிப்புகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு கழிவுகள் வெளியேற்றத்தை மதிமுக போராடி தடுத்து நிறுத்தியது. தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் திட்டத்தையும் தடுத்து நிறுத்தியது மதிமுக என தெரிவித்தார். ராகுல் காந்தி தலைமையிலான இந்திய கூட்டணியில் மிகவும் வலிமையாக உள்ளது. சூழ்நிலை காரணமாக கடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

அடுத்து வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மக்கள் மத்தியில் எழுச்சி அடையும் அதன்படி வெற்றி பெறும். பாஜக என்னும் மதவாத இயக்கத்துடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என விஜய் தெரிவித்துள்ளார் இந்த நிலைப்பாட்டில் கடைசி வரை அவர் உறுதியாக இருப்பார் என ரசிகர்கள் மட்டுமல்ல தமிழக மக்களிடமும் அந்த நம்பிக்கை உள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பெரும் அளவில் ஊழல் நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை பாஜக முன் வைக்கிறது. பாஜக ஆளும் சில மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கோடியில் ஊழல் நடைபெற்றுள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது இது குறித்து அவர்கள் ஏன் பேசுவதில்லை என கேள்வி எழுப்பினார்.