சினிமா

என் அன்பு செல்வங்கள் இனி இதுபோன்று செய்ய மாட்டார்கள் - நடிகர் சூரி

ஒரு படத்தை கொண்டாட எவ்வளவோ விதம் உள்ள நிலையில், இது போன்ற கொண்டாட்டம் தேவையில்லை என்று என் அன்பு செல்லங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன் என மதுரையில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

என் அன்பு செல்வங்கள் இனி இதுபோன்று செய்ய மாட்டார்கள் - நடிகர் சூரி
என் அன்பு செல்வங்கள் இனி இதுபோன்று செய்ய மாட்டார்கள் - நடிகர் சூரி
மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் உள்ள ரேடியன்ஸ் திரையரங்கில் மாமன் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் நடிகர் சூரி தியேட்டருக்கு வருகை தந்தார். அப்போது நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, மாமன் படம் உணர்வு ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில் ஒருவனாக இந்த படம் மூலம் சென்றடைந்துள்ளேன். படம் மக்களைச் சென்றடைந்து இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதுபோன்ற திரைப்படத்தில் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படம் மூலமாக தமிழக மக்களின் குடும்பங்களில் எளிதாக ஒருவனாக உள் நுழைந்துள்ளேன். தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோவின் மனைவி நேற்று மாமன் படத்தை பார்த்துவிட்டு நம் குடும்ப கதையை எடுத்து வைத்துள்ளார்கள் என பேசினார்கள். இதுதான் இந்த படத்தின் வெற்றி. ஒவ்வொரு குடும்பத்தின் கதையாக மாமன் கதை உள்ளது.

என் தம்பியோ தங்கையோ குழந்தைகளோ மண் சோறு சாப்பிட்டால் இதுபோன்று படத்தை கொண்டாடினால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.ஒரு படத்தை கொண்டாட எவ்வளவோ விதம் உள்ளது. இது போன்ற கொண்டாட்டம் தேவையில்லை. என் அன்பு செல்லங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனிமேல் இதுபோன்ற செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.

ராஜாக்கூர் சூரி தான் கோடம்பாக்கம் சூரியாக உள்ளேன். எப்போதுமே நான் மண்ணின் மைந்தன் தான். நான் எப்போதுமே மக்களோடு எளிதாக இணையக்கூடியவன்.வருடத்திற்கு ஒருமுறை இது போன்ற வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. மாமன் திரைப்படத்தை தொடர்ந்து மண்டாடி திரைப்படம் வர உள்ளது. அது முற்றிலும் வேறு கதைக்களமாக உள்ளது.

நாளை என்ன நடக்கும் என தெரியாது. நமது வேலையை நாம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நம்மை இயக்குவதற்கும் நமக்காக கதை தயாரிக்கவும் நிறைய பேர் இருக்கிறார்கள். நம்மை இயக்குவார்கள் என்று கூறினார்.

அரசியலுக்கு வருவீர்களா பிரச்சாரம் செய்வீர்களா குறித்த கேள்விக்கு, முதலில் கிடைத்ததை தக்க வைக்க வேண்டும். முதலில் சினிமா தான் என் வேலை அதனை பார்க்க வேண்டும். மண்ணின் மைந்தனாக சினிமாவில் நடித்துக் கொண்டே இருப்பேன். நீங்கள் எதிர்பார்ப்பது எப்போது என்று எனக்கு தெரியாது என்றார்.