தமிழ்நாடு

ஒகேனக்கல் ஆற்றில் பெருக்கெடுத்த காவிரி – வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீர் அதிகரித்து காணப்படுகிறது.

ஒகேனக்கல் ஆற்றில் பெருக்கெடுத்த காவிரி – வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் அதிகரிப்பு
ஒகேனக்கல் ஆற்றில் பெருக்கெடுத்த காவிரி – வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில், இரண்டு நாட்களுக்கு முன்னர், நீர்வரத்து 7ஆயிரம் கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. தமிழக கர்நாடகா காவிரி கரையோரங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலூவில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 3000 கன அடியாக நீர் இருப்பு இருந்த நிலையில், தொடர்ந்து வினாடிக்கு 5000 கன அடியாக நீர் அதிகரித்தது.

மேலும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழக எல்லையோர காவிரி ஆற்று பகுதிகளிலும் பெய்த மழையின் அளவு குறைந்தது. இதனால் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி. சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகம் குறைந்தது.

அதனை தொடர்ந்து இன்று இரவு காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக இன்று காலை 7.30 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்து. இதனைத் தொடர்ந்து தமிழக எல்லையென பில்லிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.