K U M U D A M   N E W S

சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை மகளிர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வங்கி கணக்கில் தமிழக அரசு வரவு வைத்துள்ளது.

சென்னை மெரினாவில் ரோப் கார் வசதி....மேயர் கொடுத்த அப்டேட்

சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என சென்னை மேயர் பிரியா விளக்கம்

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்தவர் இபிஎஸ்.. முதலமைச்சர் விமர்சனம்

நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

ED விசாரணைக்கு தடை- டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை... தீர்ப்பை பட்டாசு வெடித்து திமுகவினர் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை வால்பாறை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் பரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பொள்ளாச்சி வழக்கு...சாகும் வரை ஆயுள் தண்டனை...அரசு தரப்பு கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசம்– திமுக கூட்டணி கட்சித் தலைவர் வாசுகி குற்றச்சாட்டு

சிபிஎம் வாசுகி, தமிழக அரசு, போலீஸ், முதலமைச்சர் முகஸ்டாலின், CPIM Vasuki, Tamil Nadu Government, Police, Chief Minister MK Stalin

“தாக்குதலுக்கு பயந்து அவசரமாக வெளியேறினோம்” - பஞ்சாப்பில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் பேட்டி

பஞ்சாபில் சிக்கி தவித்த 12 தமிழக மாணவர்கள் தமிழ்நாடு அரசு உதவியால் சென்னை திரும்பினர்

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை - வானதி சீனிவாசன்

இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் பேச அதிக நேரம் கொடுக்கப்படுகிறது - சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டசபையில் நேரலை துண்டிக்கப்படுகிறது என கூறுவது உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் அப்பாவு பேட்டி

திமுக ஆட்சியில் அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு – நயினார் நாகேந்திரன்

குளித்தலை அருகே 12ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பின்னரே சாதிச்சான்றிதழ்கள் வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

முழுமையான விசாராணைக்கு பிறகே சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் - தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலை பெயரை மாற்றக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலையை பெரியார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றக் கோரிய வழக்கில் எட்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுகின்றனர் - முதலமைச்சர் உவமை

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுவதாகவும், அவர்களின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழக அரசு சாதனை படைத்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு முதலமைச்சர் நேசக்கரம் நீட்டுகிறார்- அமைச்சர் சா.மு.நாசர்

மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார் போப் ஆண்டவர் என அமைச்சர் நாசர் பேட்டி

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு!

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதால், நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தண்டனைகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கும் என்று செய்திகள் வெளிவருகின்றன.

தீவிரவாத தாக்குதல்: ஒரு சிலரின் கருத்துகள் மன வருத்தத்தை தருகிறது... தமிழிசை செளந்தரராஜன்

தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தி.மு.க ஆட்சி 10 மாதத்தில் கலைந்துவிடும் - நடிகை விந்தியா பேச்சு!

தமிழகத்தில் திமுக ஆட்சி இன்னும் 10 மாதங்கள் மட்டும் தான் என்று அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்...தவெக தலைவர் விஜய்

என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.