டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கவாய் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ED அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது
முன்னதாக சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக வழக்குபதிந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கார்ப்பரேசனை எவ்வாறு அமலாக்கத்துறை சோதனையிட முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை
கூட்டாட்சித் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அமலாக்கத்துறை செயல்படுவதாகவும், ரூ.1,000 கோடி முறைகேடு என அமலாக்கத்துறை கூறும் நிலையில், அதன் மூல வழக்கு எங்கே? எனவும் கேள்வி எழுப்பியது.
ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் எனவும், தனி நபர்கள் செய்த விதிமீறலுக்காக, ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.மேலும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.