சபாநாயகர் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),167 ஆண்டுகள் தொன்மையானது.இக்கல்லூரியில் மொத்தம் 17 துறைகள் உள்ளது. இவற்றில் 12 துறைகளில் ஆய்வுத்துறைகளும் உள்ளது என்பது பெருமைக்குரியது. வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரி, கணிதமேதை ராமானுஜன், தமிழ்தாத்தா உவேச, தென்கச்சி கோ.சுவாமிநாதன், இந்து கஸ்தூரிரங்கன், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் முன்னாள் இந்நாள் மத்திய மாநில அமைச்சர் பெருமக்கள் என பலர் கல்வி பயின்ற சிறப்பும் கொண்ட இக்கல்லூரியில், சுமார் 2,500க்கு மேற்பட்டோர் பல்வேறு மாவட்டத்திலிருந்து இக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் அமைச்சர் கோசி.மணி, தொகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் அரசு நிதி ரூ.65 லட்சம் மதிப்பீட்டுத்தொகை 35 லட்சம் என 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் தற்போது புதுப்பிக்கப்பட்ட திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்குஜம், தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம்
தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்பாவு, தனிப்பட்ட ஒருவரின் பிரச்னை சமூக பிரச்சனையாக மாற்றுவார்கள். இதை வைத்துக்கொண்டு தமிழகத்தில் அமைதி இல்லை என கூறக்கூடாது.
சட்டத்திற்கு புறம்பான நிகழ்வில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் வழக்கு, கைது நடவடிக்கை உடனே எடுக்கப்படுகிறது.இதை எதிர்க்கட்சிகளும் புரிந்துக்கொண்டு விட்டனர். சட்டசபையில் எந்த விருப்பும், வெறுப்பும் இல்லாமல், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேச அதிக நேரம் கொடுப்படுகிறது.ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு குறைந்த நேரம் தான் பேச அனுமதி அளிக்கப்படுகிறது.
உண்மைக்கு புறம்பான செய்தி
சட்டசபையில் நேரலை துண்டிக்கப்படுகிறது என கூறுவது உண்மைக்கு புறம்பானது. கேள்வி நேரம், அமைச்சர்களின் பதில் உரை, முதல்வர் உரை ஒளிப்பரப்படுகிறது. எல்லாவற்றையும் நேரலை செய்ய முடியாது. 1952ம் ஆண்டுக்கு பிறகு சட்டசபை நிகழ்வுகள், ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளது. 1921ல் இருந்து 52ம் ஆண்டு வரை சட்டசபை நிகழ்வுகள் எழுத்து வடிவங்களில் உள்ள மாற்றங்கள் சரி செய்து, எதையும் மறைக்காமல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.