‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை
இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இரு சக்கர வாகன பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவிற்கு விலக்கு அளிக்க வேண்டும், 12 வருடமாக உயர்த்தாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
கன்னியாகுமரியில் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காத புகாரில், அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மற்றும் தேனி உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மத்திய - மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்ச் 21ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்
தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
தெருநாய்கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை உயர்த்தி வழங்குமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் செயல்படும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வரும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 வரை அதிகரித்துள்ளது.
சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் சமூக நலத்துறையிலிந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென (Women Empowerment) தனி துறையை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலையத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள 25 ஆசியர்களை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'எந்திரன்' திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பேருந்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை சென்னை ஐஐடி வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசியை தேசிய அட்டவணையில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
ஈஷா சார்பில் நடைப்பெற்ற தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம் கோலகலமாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைப்பெற்று வந்த நாட்டு மாட்டு சந்தையும் நிறைவடைந்துள்ளது.
அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின், தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.