மதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி என்பவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அறிமுகமாகி நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’படத்தில் அவருக்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் மாஸ்டராக நடித்து 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளார்.
மதுரையில் அஞ்சலி
இதனிடையே அண்மையில் ரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read more: துருவ் விக்ரமும் எனக்கு போட்டிதான்...மகன் குறித்து நடிகர் சீயான் விக்ரம் பேச்சு
தொடர்ந்து அவரது உடல் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது சொந்த ஊரான மதுரைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உறவினர் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இறுதி மரியாதை
இதனிடையே பொதுமக்கள், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் போலந்து நாட்டில் உள்ள அவரது உடன் பிறந்த சகோதரர் என காலை முதலே ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
Read more: 7 அடி ஆழ குழியில் உயிருடன் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்.. நடந்தது என்ன?
இந்நிலையில் மாலை 5 மணியளவில் உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலானது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மதுரை காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.