K U M U D A M   N E W S

தமிழ்நாடு

நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

போலி ஆவணங்கள் மூலம் சொகுசுக் கார்கள் இறக்குமதி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாகத் திரைப்பட நடிகர்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் தொடர்புடைய கேரளா மற்றும் தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று தீவிரச் சோதனை நடத்தி வருகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் பல லட்சம் மோசடி.. பட்டதாரி இளைஞர் கைது!

பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலிப் பக்கம் தொடங்கி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு புகார்: பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை!

பிரபல துணிக்கடை நிறுவனமான 'கோ கலர்ஸ்'-க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

"உலகை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழகம் உயர்ந்துள்ளது"- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

"இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழகம் உயர்ந்துள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.

நீதிபதி மீது காலணி வீச முயற்சி: முறைசெய்யும் நீதித்துறையை கறைசெய்யும் களங்கமாகும்- வைரமுத்து கண்டனம்!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற சம்பவத்திற்குக் கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை புதிய உச்சம்: இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 உயர்வு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,400 உயர்ந்து ரூ.89 ஆயிரம் என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு.. அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு!

கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேரை வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"உத்தரவு பிறப்பிக்கும் நீதிபதியையும் விமர்சிக்கின்றனர்"- நீதிபதி செந்தில் குமார்

நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

கஞ்சா வைத்திருந்ததாக பாஜக நிர்வாகியின் மகன் கைது.. போலீசார் தீவிர விசாரணை!

சென்னையில் காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி, பா.ஜ.க.நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: ரூ.11 ஆயிரத்தை கடந்த ஒரு கிராம் தங்கம்!

தங்கம் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

ரூ.2 லட்சம் மாயம்: "கடன் பாக்கி" எனக் கூறி முதியவருக்குப் பணம் வழங்க மறுத்த வங்கி!

சென்னை மண்ணடியை சேர்ந்த முதியவர் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.2 லட்சம் கணக்கில் இருந்து மாயமானதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

"ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்"- முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்!

கரூர் சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.

Heavy Rain: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் வரும் 9-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிதாக விடப்பட்ட ஆண் சிங்கம் கூண்டுக்குள் திரும்பாததால் தேடல்; அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவல்!

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், லயன் சபாரிக்காக விடப்பட்ட புதிய ஆண் சிங்கம் ஒன்று 2 நாட்களாக மாயமானது. பூங்கா ஊழியர்களின் தேடுதலுக்குப் பின், அந்தச் சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் லயன் சபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட இருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

80கள், 90கள் நட்சத்திரங்கள் ரீயூனியன்: சென்னையில் இந்திய நடிகர்கள் சங்கமம் - சிரஞ்சீவி உணர்ச்சிப்பூர்வமான பதிவு!

தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1980கள் மற்றும் 90களின் 31 முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நட்பைக் கொண்டாட நேற்று (அக். 4) சென்னையில் 'நட்சத்திர ரீயூனியனில்' ஒன்று கூடினர். சிரஞ்சீவி, சரத்குமார், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

காசா அமைதி ஒப்பந்தம்: ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை!

காசாவில் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (அக். 5) மாலைக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். தவறினால் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அடி கிடைக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

கரூர் விபத்து: வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? நீதிமன்றக் கேள்விக்குப் பின் - விஜய் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வேலாயுதபாளையம் போலீசார் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.