தமிழ்நாடு

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை அதிரடி உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை அதிரடி உயர்வு!
Gold Rate
கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சென்னையில் சற்றே தணிந்துள்ள நிலையில், வெள்ளி விலை யாரும் எதிர்பாராத விதமாகப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தங்கம் விலை சரிவு

நேற்று வாரத்தின் முதல் நாளிலேயே சவரன் ரூ. 1.20 லட்சத்தைக் கடந்து பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்தது. ஆனால், இன்று (ஜன.27) காலை தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. நேற்று ரூ. 1,20,200-க்கு விற்ற ஒரு சவரன் தங்கம், இன்று ரூ. 520 குறைந்து ரூ. 1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 65 குறைந்து ரூ. 14,960 ஆக உள்ளது.

விலை ஓரளவிற்குத் தணிந்திருந்தாலும், தங்கம் இன்னும் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீடிப்பது நகை வாங்குவோருக்குச் சவாலாகவே உள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளி விலை இன்று கட்டுப்பாடின்றி எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 12,000 அதிகரித்துள்ளது. நேற்று ரூ. 375-க்கு விற்ற ஒரு கிராம் வெள்ளி, இன்று ரூ. 387-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 3,87,000 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தற்போதைய வேகத்தைப் பார்த்தால், வெள்ளி விலை விரைவில் ஒரு கிராம் 400 ரூபாயைத் தொட்டுவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.