ஆர்சிபி வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!
ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது. காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற 64-வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் மீட்டில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஹெடிங்லி டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பீல்டிங் ரசிகர்களால் பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Paris Diamond League: பாரிஸில் நடைபெற்ற பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில், நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றில் 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் 2025-ல் தனது முதல் டைட்டிலை வென்று அசத்தியுள்ளார் நீரஜ் சோப்ரா.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இன்று (ஜூன் 20) தொடங்க்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது.
ஒருசில சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை’ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
’எனது பணிச்சுமையினை குறைத்து கொள்ள வேண்டும் என்கிற மருத்துவரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தான் கேப்டன் பதவியினை ஏற்கவில்லை’ என பும்ரா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
BCCI கோரிக்கை நிராகரிப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த இறுதிப்போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என BCCI முன்வைத்த கோரிக்கையை ஜெய்ஷா தலைமையிலான ICC நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
அனைத்து வகையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதியதொரு சாதனையினை படைத்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட், அதுவும் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி.
தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசனில், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின் உட்பட அவரது அணி வீரர்கள் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டினை கண் முன்னே நிகழ்த்தி காட்டிய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் முதல் கருப்பினத்தை சேர்ந்த கேப்டன் பல்வேறு விமர்சனங்களை தாண்டி, 27 ஆண்டுகளுக்கு பிறகு தனது நாட்டின் ஏக்கத்தை நிறைவு செய்து, ஐசிசி-யின் கோப்பையை தன்னுடைய வெற்றிப்படையின் மூலம் கைப்பற்றி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
கடந்த சில வருடங்களாக பவுண்டரி லைன்களில் நிற்கும் பீல்டர்கள் ஸ்பைடர் மேன் போல், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை அந்தரத்தில் தட்டிவிட்டு, பின்னர் எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிப்பதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். இனிமே இந்த மாதிரி கேட்ச்களை பிடித்தால் அவுட் வழங்கபடாது என்று புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (2025)ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது கேப்டன் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.
பன்னி ஹாப் என அழைக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளின் விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.
மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், 19 சிக்ஸர்களை விளாசி கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆர்சிபி ரசிகர் ஒருவர் TNPL போட்டியினை வர்ணணை செய்ய வருகைத் தந்த பத்ரிநாத்தை நோக்கி கிண்டலடித்தார். அதுத்தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், தனக்கு அவுட் கொடுத்த பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கையுறையினை பெவிலியன் திசை நோக்கி தூக்கி எறிந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்திய அணியின் ரியல் சுட்டிக் குழந்தை, சுழல் மாயாவி பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.