இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கும், பிரபல இந்தி இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23 அன்று நடைபெறவிருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கிரிக்கெட் மற்றும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருமண நிறுத்தம் குறித்து வெவ்வேறு காரணங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
திருமண ஏற்பாடுகளும் ஒத்திவைப்பும்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல இந்தி இசையமைப்பாளரான பலாஷ் முச்சலை ஸ்மிருதி மந்தனா நீண்ட காலமாகக் காதலித்து வருகிறார். அண்மையில், மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை வீடியோ வெளியிட்டு ஸ்மிருதி மந்தனா உறுதிப்படுத்தியிருந்தார். இவர்கள் இருவருக்கும் நவம்பர் 23 அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக, திருமணத்தை ஒத்திவைப்பதாகக் குடும்பத்தினர் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, உடல்நலக் குறைவு காரணமாகப் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமூக வலைதளங்களில் நீக்கப்பட்ட பதிவுகள்
திருமணம் நின்ற நிலையில், ஸ்மிருதி மந்தனா தான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட வீடியோவை உடனடியாகத் தன் சமூக வலைதளப் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். மேலும், திருமணம் தொடர்பாக எடுத்துக்கொண்ட ரீல்ஸ்களை ஸ்மிருதியும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட சக வீராங்கனைகளும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து நீக்கியுள்ளனர்.
திருமணம் நின்றதற்கான சர்ச்சை காரணம்
தந்தையின் உடல்நலக் குறைவால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக முதலில் காரணம் கூறப்பட்டாலும், திருமணம் நின்றதற்குக் காரணம் பலாஷ் முச்சல் மீது எழுந்த மோசடிப் புகாராக இருக்கலாம் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. பலாஷ் முச்சல், திருமணத்திற்குச் சில நாள்கள் முன்னதாக, மேரி டி'கோஸ்டா என்ற வேறு ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்டதாகக் கூறப்படும் சில ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ரெட்டிட் (Reddit) பக்கத்தில் வெளியான அந்த ஸ்கிரீன்ஷாட்களில், பலாஷ் முச்சல், மேரி டி'கோஸ்டா என்ற பெண்ணை ஸ்விம்மிங் செய்ய அழைத்து Flirt செய்ததாகவும், அதற்கு அந்தப் பெண், "ஸ்மிருதியை நீங்கள் லவ் பண்றீங்க தானே.. அப்புறம் ஏன் என்னை அழைக்கிறீர்கள்?" எனக் கேட்க, முச்சல் அதற்குப் பதில் சொல்லாமல் தவிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உண்மையிலேயே தந்தையின் உடல்நலக் குறைவால் திருமணம் நின்றதா அல்லது பலாஷ் முச்சல், ஸ்மிருதியை ஏமாற்றினாரா என்பது குறித்துப் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

LIVE 24 X 7