K U M U D A M   N E W S
Promotional Banner

அரசியல்

BREAKING | மாபெரும் மனித சங்கிலி போராட்டம்... அதிமுக அறிவிப்பு!

மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றுங்கள் - அன்புமணி ராமதாஸ்!

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 2ஆம் தேதி தருமபுரி மாவட்ட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காந்தியை புறக்கணித்த திருமாவளவன்.. மது ஒழிப்பு மாநாடு அன்று சர்ச்சை

சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.

32,500 பேருக்கு ஊதியம் கொடுக்கல.... மாநில அரசு என்ன பண்ணுது? - ராமதாஸ் கேள்வி

மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, மாற்று ஏற்பாடு செய்யும் கடமை மாநில அரசுக்கு இல்லையா? என பாமக நிறுவனம் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று நடைபெறும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு... 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தக்கோரி விசிக சார்பில் இன்று மாபெரும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

ADMK IT Wing : தமிழகத்தில் அதிமுக 10% வாக்குகளை இழந்துள்ளது... தேர்தல் நெருங்கிவிட்டது... எடப்பாடி பழனிசாமி வார்னிங்

ADMK IT Wing Meeting : சென்னையில் நடைபெற்ற அதிமுக ஐடி விங்க் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அதிமுக தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

விஜய்யால் பாஜகவிற்கு தான் பாதிப்பு.. திராவிட கட்சிகளுக்கு இல்லை - துரை வைகோ அதிரடி

Durai Vaiko About Actor Vijay Party : நடிகர் விஜய் சமூக நீதியையும் மதசார்பின்மையும் முன்னிறுத்தி அரசியல் செய்தால், பாஜகவிற்கு தான் பாதிப்பே தவிர, திராவிட கட்சிகளுக்கு அல்ல என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆதவ் அர்ஜுனா போட்ட பதிவு..என்ன சொன்னார் தெரியுமா?

மீண்டும் தமிழக அரசை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அந்த பதிவில், “அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதி... ஓராண்டுக்குள் முடிவு... உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கிய உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டில் மாட்டிறச்சி கலக்கப்பட்டது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கியுள்ளனர் நீதிபதிகள்.

மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்... தடுப்புகள் வைக்க உத்தரவு.... சேகர் பாபு தகவல்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 மிஸ்ஸிங் லிங்க் பகுதிகள் கண்டரியப்பட்டு அங்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஆமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

TVK Flag Issue : தவெக கொடி பஞ்சாயத்து ஓவர்... க்ரீன் சிக்னல் கொடுத்த தேர்தல் ஆணையம்... விஜய் நிம்மதி!

TVK Flag Issue : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடியை பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

தாயுமானவர் ஸ்டாலின்... அன்பை பெற இயலுமோ? அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்!

Minister Senthil Balaji X Post on CM Stalin : உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்கு வாழ்த்துகள்..... எனக்கு அரசியலுக்கு வர...... விஜய் ஆண்டனி!

துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாரிசு அரசியல் பேச்சுக்கே இடமில்லை.... கி. வீரமணி கருத்து!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகி உள்ளதற்கு வாரிசு அரசியல் என்று சொல்வது அர்த்தமற்றது என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

சசிகலா முதல்வர் ஆகாதது தெய்வத்தின் முடிவு - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!

தெய்வத்தின் முடிவால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலாவால் முதல்வராக முடியவில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்.... வாழ்த்துகளை பொழியும் பிரபலங்கள்!

துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எரிச்சல் மற்றும் பொறாமையால் விமர்சனம் - Selvaperunthagai | Kumudam News 24x7

எரிச்சல் மற்றும் பொறாமையால் விமர்சனம் செய்கின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானது குறித்து செல்வபெருந்தகை கருத்து.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை நேசிக்கக்கூடியவர்... ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்... மாரி செல்வராஜ் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வார் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைச்சர்களான கோவி செழியன், ராஜேந்திரன்... ஸ்டாலினின் குட் புக்கில் இடம் பிடித்தது எப்படி..?

புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சரவையில், கோவி செழியன், ரா ராஜேந்திரன் இருவரும் முதன்முறையாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களது பயோடேட்டாவை தற்போது பார்க்கலாம்.

Udhayanidhi: ஸ்டாலின் வழியில் துணை முதலமைச்சர் பதவி... அசுர வேகத்தில் உதயநிதி... அடுத்து என்ன..?

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக தற்போது பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தனது தந்தை ஸ்டாலின் ரூட்டில் திமுக இளைஞரணி செயலாளராக அரசியலில் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், இப்போது துணை முதலமைச்சர் பொறுப்புக்கு வந்துவிட்டார். ஸ்டாலின் வழியில் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ள உதயநிதியின் அரசியல் பயணத்தை தற்போது பார்க்கலாம்.

BREAKING | மீண்டும் அமைச்சர் நாற்காலியில் செந்தில் பாலாஜி..... ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு!

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, தற்போது மீண்டும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

BREAKING | துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்... X தள பயோவில் புதிய அப்டேட்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.

துணை முதலமைச்சராகும் உதயநிதி மீது விமர்சனம்... “பாஜக ஒரு செல்லாக் காசு...” சேகர்பாபு பதிலடி!

தமிழகத்தில் தகுதியில்லாத இயக்கம் என்பதனால் தான், மக்கள் பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை பரிசாக அளித்தனர்; தமிழக மக்களிடம் செல்லாக் காசாகிப்போன பாஜகவின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

சாட்சிகளை கலைக்க மாட்டாரா செந்தில் பாலாஜி? அமைச்சர் இப்படி செய்யலாமா? - ராமதாஸ்

பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது, செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.