அரசியல்

எந்த திணிப்பும் வெற்றி பெறாது.. விஜய் முதலில் இதை செய்யட்டும்- ஆவேசமான விஷால்

தவெக தலைவர் விஜய் முதலில் ஊடகத்தை சந்திக்கட்டும் என்றும் அவர் ஊடகத்தை சந்தித்தால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

எந்த திணிப்பும் வெற்றி பெறாது.. விஜய் முதலில் இதை செய்யட்டும்- ஆவேசமான விஷால்
விஜய்-விஷால்

விஷால் மக்கள் இயக்க தென் சென்னை மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் இல்ல நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது . இதில் நடிகர்  விஷால் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் பேசியதாவது:

மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு, “மாணவர்கள் எந்த மொழி படிக்க விரும்புகிறார்களோ அதை தான் பெற்றோர்கள் படிக்க வைக்க வேண்டும். மாணவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதை  பெற்றோர்களிடம் கேட்க வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகள் என்ன மொழி படிக்க வேண்டும், அதனால் என்ன பயன் இருக்கிறது என்பதை அறிந்து படிக்க வைக்க வேண்டும். 

எந்த ஒரு விஷயத்தையும் சட்டமாக கொண்டு வரலாம். அதையே ஒரு மனிதனின் வாழ்க்கையில் கொண்டு வர முடியாது. மனிதனின் வாழ்க்கையில் கொண்டு வரும் எந்த திணிப்பும் வெற்றி அடையாது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு துவங்கியுள்ளது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் நன்கு தூங்குங்கள், நன்கு தூங்கினால் தான் உங்கள் மூளை சரியாக வேலை செய்யும்” என்று கூறினார்.

தொடர்ந்து விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் , விஜய் முதலில் ஊடகத்தை சந்திக்கட்டும் விஜய் ஊடகத்தை சந்தித்தால் ஊடகங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கிடைக்கும். 

2026 சட்டமன்றத் தேர்தலில் விஷால் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, சிரித்தபடி மேலே கைகாட்டி கடந்து சென்றார். தமிழக அரசியலில் தற்போது மும்மொழி கொள்கை பேசுப்பொருளாகி உள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மும்மொழி கொள்கையை அமல்படுத்தாததால் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அண்டை மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய நிலையில் தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பதாக சமீபத்தில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.