August Release Movies : ஆகஸ்ட்டில் அணிவகுக்கும் புதுப்படங்கள்... கோட் ரிலீஸ் தான் காரணமா?

August Month Release Tamil Movies List : 2024 ஆண்டை பொறுத்தவரையில் தமிழில் 250 படங்கள் வரை வெளியாகலாம். இதில் 10 சதவீத படங்கள் வெற்றி அடைந்தாலே அது பெரிய விஷயம். ஆனாலும், அடுத்த ஆண்டு படங்கள் குறையாது. ஏதாவது ஒருவகையில் படங்கள் எண்ணிக்கை அதிகரி்த்துக் கொண்டுதான் இருக்கும்

Jul 29, 2024 - 13:26
Jul 29, 2024 - 16:39
 0
August Release Movies : ஆகஸ்ட்டில் அணிவகுக்கும் புதுப்படங்கள்... கோட்  ரிலீஸ் தான் காரணமா?
ஆகஸ்ட் ரிலீஸ் படங்கள்

August Month Release Tamil Movies List : 2024ம் ஆண்டு தொடங்கி, 7 மாதங்கள் ஓடிவிட்டநிலையில், இதுவரை தமிழில் 170 படங்கள் ரிலீஸ் ஆனாலும், அரண்மனை 4, கருடன், மகாராஜா, ஸ்டார், ராயன் போன்ற ஒருசில படங்களே வெற்றிப் பெற்றன. பெரும்பாலான படங்கள் தோல்வியை, பல படங்கள் படு தோல்வியையும் சந்திந்தன. ஆனாலும், புதுப்படங்களின் ரிலீஸ் குறைந்தபாடில்லை.

இப்போது தியேட்டர்களில் ராயன் ஓரளவு நன்றாக ஓடி வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெள்ளிக்கிழமை 7 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. குறிப்பாக, சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘போட்’, விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’, நகுல் நடித்த ‘வாஸ்கோடகாமா’ புதுமுகங்கள் நடித்த ‘பேச்சி’, ஜமா. ‘நண்பன் ஒருவன் வந்தபிறகு’, மன்சூர்அலிகானின் ‘கடமான் பாறை’ ஆகிய படங்கள் மோதுகின்றன.

அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது, ஆகஸ்ட் 9ம் தேதி ஹலீதா ஷமீம் இயக்கிய ‘மின்மினி’, வேல ராமமூர்த்தி நடித்த ‘வீராயிமக்கள்’, அசோக் செல்வன் நடித்த ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ விமல், கருணாஸ் நடித்த ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதின விடுமுறையையொட்டி, பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’, கீர்த்தி சுரேசின் ‘ரகுதாத்தா’, பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் நடித்த ‘அந்தகன்’, அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டிமான்டிகாலனி’ ஆகிய 5 படங்கள் ரிலீஸாகின்றன. 

ஆகஸ்ட் இறுதியில் மாரிசெல்வராஜ் இயக்கிய ‘வாழை’ உட்பட பல  படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. ஆக, ஆகஸ்ட் மாதம் 20 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டபம்பர் 5ம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மீனாட்சி சவுத்ரி நடித்த ‘கோட்’ படம் வெளியாக இருப்பதால், செப்டபம்பர் மாதம் தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை ஏற்படும். ‘கோட்’ படத்துடன் மோதினால் வசூல் பாதிக்கப்படும் என்பதால், ஆகஸ்ட்டில் இவ்வளவு படங்கள் ரிலீஸ் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் ரஜினியின் ‘வேட்டையன்’, சூர்யாவின் ‘கங்குவா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 2024 ஆண்டை பொறுத்தவரையில் தமிழில் 250 படங்கள் வரை வெளியாகலாம். இதில் 10சதவீத படங்கள் வெற்றி அடைந்தாலே அது பெரிய விஷயம். ஆனாலும், அடுத்தாண்டு படங்கள் குறையாது. ஏதாவது ஒருவகையில் படங்கள் எண்ணிக்கை அதிகரி்த்துக்கொண்டுதான் இருக்கும். யாராவது ஒருவர் படம் தயாரிக்க வந்துகொண்டே இருப்பார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னொருவர் வருவார். இதுதான் சினிமா தொழில் அதிர்ஷ்டம் அல்லது ரகசியம் என்கிறார்கள் மூத்த சினிமாகாரர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow